பேச்சுக்கு சொல்லலாம். அதுக்குன்னு பாகிஸ்தான் அணியில் அந்த இந்திய வீரரை செலக்ட் பண்ண முடியுமா? – இன்சமாம் கிண்டல் பேட்டி

Inzamam ul haq
- Advertisement -

ஆசிய கோப்பையில் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. ஷாஹீன் அப்ரிடி போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கொண்டிருப்பதால் ஆசிய கோப்பையை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி இந்தியாவிடம் 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்ததால் மனதளவில் பின்தங்கி இலங்கையிடமும் தோற்றது.

அந்த சூழ்நிலையில் தோல்வியால் பாபர் அசாம் – சாகின் அப்ரிடி ஆகியோருக்கு இடையே விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது அந்நாட்டு ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியது. அத்துடன் ஆசிய கோப்பையில் ஒரு விக்கெட் கூட எடுக்காத துணை கேப்டன் சடாப் கானை நீக்கி விட்டு சாகின் அப்ரிடி துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் அந்நாட்டு வட்டாரத்தில் வலுவாக எழுந்தன.

- Advertisement -

கிண்டலான பதில்:
அந்த சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணியை புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்வுக்குழு தலைவர் மற்றும் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் நேற்று வெளியிட்டார். அதில் நாசீம் ஷா காயத்தால் உலகக்கோப்பையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த அவர் துணை கேப்டனாக தொடர்ந்து சடாப் கான் நீடிப்பார் என்று தெரிவித்தார்.

ஆனால் குல்தீப் யாதவ் 9 விக்கெட்டுகளை சாய்த்து தொடர்நாயகன் விருது வென்ற அதே ஆசிய கோப்பையில் நிலையில் ஒரு விக்கெட் கூட எடுக்காத அவரை முதன்மை ஸ்பின்னராக உலகக் கோப்பில் தேர்வு செய்வது சரியா? செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீங்கள் சொல்வதற்காக இந்தியாவை சேர்ந்த குல்தீப் யாதவை பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்ய முடியாது என்று கிண்டலான பதிலை கொடுத்த இன்சமாம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது சுமாராக செயல்பட்டாலும் சடாப் கான் தொடர்ந்து வாய்ப்பை பெறுவார் என கூறினார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் 2 பவுலர்கள் பற்றி சில நல்ல புள்ளி விவரங்களுடன் இங்கே பேசுகிறீர்கள். ஆனால் அதற்காக நான் குல்தீப் யாதவை பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்ய முடியாது என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக வேறு அணியில் இருக்கும் அவரை என்னால் பாகிஸ்தானுக்கு தேர்வு செய்ய முடியாது என்பது ஒரு பிரச்சினையாகும்”

இதையும் படிங்க: குறைச்சு எடை போடாதீங்க.. எதிரணிகளுக்கு பயமுறுத்தும் திறமை கொண்ட அவர் தான் நம்ம 2023 உ.கோ துருப்பு சீட்டு – சேவாக் பாராட்டு

“மேலும் சடாப், நவாஸ் ஆகியோர் தொடர்ந்து விளையாடக் கூடியவர்கள் என்பதால் வாய்ப்பு கொடுத்துள்ளோம். மேலும் நீண்ட காலமாக உலகக்கோப்பைக்கான திட்டங்களை வகுக்கும் நாங்கள் அதை திடீரென்று மாற்ற முடியாது. ஏனெனில் அந்த இருவருமே கடந்த 2 வருடங்களாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் சமீப காலங்களில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறும் அவர்கள் அதை ஏற்கனவே செய்துள்ளதால் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.

Advertisement