குறைச்சு எடை போடாதீங்க.. எதிரணிகளுக்கு பயமுறுத்தும் திறமை கொண்ட அவர் தான் நம்ம 2023 உ.கோ துருப்பு சீட்டு – சேவாக் பாராட்டு

Virender Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. மொகாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் 71, ருதுராஜ் கைக்வாட் 74, கேஎல் ராகுல் 58*, சூரியகுமார் யாதவ் 50 ரன்கள் எடுத்து 48.4 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்று கொடுத்தனர். அந்த வகையில் ஆசிய கோப்பையை வெற்றியை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இந்திய அணி மேலும் பலமடைந்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

சேவாக் பாராட்டு:
அதிலும் குறிப்பாக 2023 உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ராகுல் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் 2023 ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடி ஃபார்முக்கு திரும்பிய நிலையில் சூரியகுமார் யாதவ் மட்டுமே தடுமாறி வந்தார். சொல்லப்போனால் கடந்த பிப்ரவரியில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை சதம் கூட அடிக்காமல் 28 போட்டிகளில் 25.5 என்ற சுமாரான சராசரியை கொண்டுள்ள அவருக்கு டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக உலகக்கோப்பையில் நம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த சூழ்நிலையில் ஆசிய கோப்பையில் கூட தடுமாறிய அவர் இப்போட்டியில் ருதுராஜ், கில் ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுத்த பின் ஸ்ரேயாஸ் ஐயர் 3, இஷான் கிசான் 18 ரன்களில் அவுட்டானதால் 185/4 என இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியான போது களமிறங்கினார். இருப்பினும் இம்முறை ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி ஒரு கட்டத்திற்கு பின் தன்னுடைய இயற்கையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 50 (49) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

குறிப்பாக ராகுலுடன் 5வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த அவர் 20 இன்னிங்ஸ் கழித்து முதல் முறையாக அரை சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் பார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் முக்கிய நேரத்தில் கியரை மாற்றி அதிரடியாக விளையாடக்கூடிய திறமை கொண்ட சூரியகுமார் உலகக்கோப்பையில் துருப்புச் சீட்டு வீரராக இருப்பார் என்று விரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs AUS : அதே டீம்.. அதே கலர் பால்.. இதுக்காக எத்தனை நாள் கண்டேன் தெரியுமா – சூரியகுமார் நெகிழ்ச்சி பேட்டி

குறிப்பாக எதிரணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்ட அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சூர்யகுமாருக்காக மகிழ்ச்சியடைகிறேன். நிச்சயமாக அவர் துருப்புச் சீட்டு வீரர். இங்கே பல வீரர்களிடம் அவரை போல கியரை மாற்றி விளையாடும் திறமை இல்லை. குறிப்பாக அவரால் எதிரணிகள் மனதில் பயத்தை உருவாக்கும் முடியும். எனவே தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்தார் அவர் ஒரு சொத்தாக இருப்பார். வாழ்த்துக்கள் பாரத்” என்று கூறினார்.

Advertisement