IPL 2023: சூரியகுமார், பட்லர் இல்ல – அந்த 4 இந்திய வீரர்களில் ஒருவர் தான் ஆரஞ்சு தொப்பி ஜெய்ப்பாங்க – சேவாக் கணிப்பு

Virat Kohli Virender Sehwag Suryakumar Yadav
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 தொடர் கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கியுள்ளது. வரலாற்றில் 16வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் தங்களது கனவு முதல் கோப்பையை வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளன. அதே போல் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் நீண்ட வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் லக்னோ தன்னுடைய 2வது சீசனில் முதல் கோப்பையை வெல்லும் முயற்சியுடனும் களமிறங்கியுள்ளன.

அதற்கு போட்டியாக கோப்பையை தக்க வைக்கும் கடினமான வேலையை செய்யும் நோக்கத்துடன் குஜராத் அணியும் கடந்த ஃபைனலில் நழுவ விட்ட கோப்பையை இம்முறை முத்தமிட சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானும் போராட தயாராகியுள்ளன. இந்த அணிகளுடன் பெரிய தலைகளான மும்பையும் சென்னையும் தங்களது அலமாரியில் மற்றுமொரு கோப்பையை அடுக்குவதற்காக போட்டியிட்டு வருகின்றன. பொதுவாகவே ஐபிஎல் தொடரில் கோப்பைக்கு அடுத்தபடியாக அதிரடி சரவெடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து தங்களது அணிக்கு பெரிய ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கமாகும்.

- Advertisement -

சேவாக் கணிப்பு:
அந்த வகையில் இந்த சீசனில் கடந்த முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற ஜோஸ் பட்லர் முதல் போட்டியிலேயே 54 ரன்கள் குவித்து அதை மீண்டும் வெல்வதற்கான வேலையை துவக்கியுள்ளார். அதே போல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் சூரியகுமார் யாதவ் தற்போதுள்ள ஃபார்முக்கு ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு வாய்ப்புள்ளது என்றாலும் சமீபத்தில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட் பதிவு செய்ததிலிருந்து இன்னும் மீளாமல் முதல் போட்டியிலேயே தடுமாறியதை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இந்த சீசனில் ருதுராஜ் கைக்வாட், கேஎல் ராகுல், விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா ஆகியோரில் யாராவது ஒருவர் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “ருதுராஜ் கைக்வாட் நம்பர் ஒன், கேஎல் ராகுல் நம்பர் 2, 3வது வீரரை டாஸ் போட்டு பார்க்கும் போது விராட் கோலி அல்லது ரோகித் சர்மாவாக இருப்பார்கள்” என்று கூறினார். அத்துடன் சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் 3வது அல்லது 4வது இடத்தில் விளையாடினால் கச்சிதமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்”

- Advertisement -

“அவர் கூறுவதில் கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திணறிய ரோகித் சர்மா இந்த வருடமும் முதல் போட்டியில் 1 (10) ரன்கள் எடுத்து தடுமாறி ஆட்டமிழந்தார். அதே போல் கடந்த வருடம் 600+ ரன்கள் குவித்தாலும் அதன் பின் அடித்த நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட ராகுல் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாகும் வகையில் மோசமாக செயல்பட்டார். அப்போதிருந்து ஃபார்மை இழந்து திண்டாடி வரும் அவர் இந்த வருடத்தின் முதல் போட்டியிலும் ஒற்றை இலக்க ரன்ளில் ஆட்டமிழந்தார்.

ஆனால் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் அட்டகாசமாக விளையாடிய ருதுராஜ் 92 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறார். அத்துடன் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சமீபத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலியும் முதல் போட்டியில் 82* ரன்கள் விளாசி பெங்களூருவை வெற்றி பெற வைத்து அசத்தினார்.

இதையும் படிங்க:CSK vs LSG : தோனி ஏற்படுத்திய இம்பேக்ட், லக்னோ பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து மிரட்டிய போட்டியில் சிஎஸ்கே வென்றது எப்படி?

எனவே முதல் போட்டியிலேயே நல்ல அடித்தளத்தை பெற்றுள்ள இவர்கள் சேவாக் கூறும் நால்வரில் ஒருவராக இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. இவர்களுடன் சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் போன்ற இளம் இந்திய வீரர்களும் ஆரஞ்சு தொப்பிக்கு போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement