ஆசிய கோப்பை 2023 : சமமா இருந்தாலும் பாபர் அசாமை தாண்டி விராட் கோலி பெருசா அடிக்க மாட்டாரு – முன்னாள் ஆஸி வீரர் வித்தியாச பேட்டி

Babar
- Advertisement -

ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனன் யார் என்பதை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30 முதல் கோலாகலமாக துவங்குகிறது. விரைவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடக்கும் இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய கண்டத்தின் டாப் 6 கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன. அதில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி மோதும் போட்டிக்கு தான் உச்சகட்டமான எதிர்பார்ப்பு வழக்கம் போல காணப்படுகிறது.

ஏனெனில் ரோகித் சர்மா, முகமது ரிஸ்வான், ஜஸ்பிரித் பும்ரா, ஷாஹின் அப்ரிடி போன்ற ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருக்கும் இவ்விரு அணிகள் மோதும் போட்டி உச்சகட்ட பரபரப்புடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று சொல்லலாம். அதனால் இவ்விரு அணி வீரர்களில் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய நாட்டுக்கு வெற்றியை பெற்று கொடுக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அந்த நிலைமையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு கேப்டன் பாபர் அசாமும் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது என்று சொல்லலாம்.

- Advertisement -

சமமான வீரர்கள்:
இருப்பினும் இதில் பாபர் அசாமை விட 25000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி 75 சதங்களை அடித்து நவீன கிரிக்கெட்டில் நாயகனாக போற்றப்படும் விராட் கோலி கடந்த ஆசிய கோப்பையில் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஃபார்முக்கு திரும்பியதை போல இம்முறையும் அதிக ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் இந்தியாவின் விராட் கோலியை போலவே செயல்பட்டு வருவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி பாராட்டியுள்ளார்.

மேலும் அதில் விராட் கோலி சீனியராக இருந்தாலும் பாபர் அசாமை விட இந்த ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்து விடுவார் என்று தமக்கு தோன்றவில்லை என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் கிட்டத்தட்ட விராட் கோலியை எனக்கு நினைவுபடுத்துகிறார். அவர் அற்புதமான கிரிக்கெட் ஷாட்களை அடிக்கிறார். குறிப்பாக கடந்த ஒரு தசாபத்திற்கு மேல் விராட் கோலி எப்படி இந்த கிரிக்கெட்டை நன்றாக படித்து விளையாடுகிறாரோ அதே போல அவரும் நன்றாக புரிந்து விளையாடுவது போல் தெரிகிறது”

- Advertisement -

இதையும் படிங்க:ரெண்டு பேரும் நல்ல பிளேயர் தான். ஆனா இவரு ரொம்பவே ஸ்பெஷல் கிரிக்கெட்டர் – மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் கருத்து

“கடந்த பல வருடங்களாக சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்த விராட் கோலியை போலவே அவரும் சேசிங் செய்வதில் அசத்துகிறார். எனவே அந்த இருவருக்கு மத்தியில் நிறைய பிடித்த விஷயங்கள் இருக்கிறது. இருப்பினும் அதற்காக இந்த ஆசிய கோப்பையில் பாபர் அசாமை விட விராட் கோலி அதிக ரன்கள் அடிப்பார் என்று நான் சொல்ல மாட்டேன். எனவே இருவர் மீதும் சமமான அழுத்தம் இருப்பதால் அதை சமாளித்து யார் அசத்தப்போகிறார் என்பதை பார்ப்பது ஆவலாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement