ரெண்டு பேரும் நல்ல பிளேயர் தான். ஆனா இவரு ரொம்பவே ஸ்பெஷல் கிரிக்கெட்டர் – மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் கருத்து

Stoinis
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி அனுபவ ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் தனது கரியரை ஒரு லெக் ஸ்பின்னராக துவங்கி பின்னர் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். இதுவரை 102 டெஸ்ட் போட்டிகள், 142 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15,000 மேற்பட்ட ரன்களையும் 44 சதங்களையும், 72 அரை சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

மேலும் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் இவரது பங்களிப்பும் அந்த அணிக்கு பெரிய ஒரு பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டான மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஸ்பெஷல் பிளேயர் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே மாதிரியான வீரர்கள் தான்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை இருவருமே தங்களது மிகச் சிறப்பாக பங்களிப்பை அவரவர் அணிகளுக்காக வழங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் ஏன் ஸ்பெஷல் என்றால் : ஒவ்வொரு நாளும் அவர் போட்டியை மிகவும் ரசித்து விளையாடுகிறார். அதோடு எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அதில் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்.

தற்போது ஒயிட் பால் கிரிக்கெட்டிலும் அவர் சற்று ஆக்ரோஷமாக விளையாடி வருவதை ஒவ்வொரு தொடரிலும் நான் பார்த்து வருகிறேன். இந்த உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாடும் விதத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நிச்சயம் என்னுடைய எதிர்பார்ப்பின் படியே அவர் இந்த தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஸ்டீவ் ஸ்மித் ஒரு திறமையான வீரர். கோலி எவ்வாறு இந்திய அணியின் வெற்றிகளுக்கு தனது பங்களிப்பை வழங்குகிறாரோ அதேபோன்று அவரும் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருகிறார். அவரது பேட்டிங்கை பார்க்கும்போது பல்வேறு விடயங்களை இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க : எனக்கும் வேர்ல்டுகப்ல 30 பால்ல செஞ்சுரி அடிக்க ஆசை தான்.. ஆனா ஒரு விஷயம் – ஜோஸ் பட்லர் வெளிப்படை

அதோடு அவரும் ஒரு மாணவராகவே ஒவ்வொரு போட்டியிலும் சில பாடங்களை கற்று தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஸ்மித், விராட் கோலி இருவருமே நவீன கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் அவர்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும் அதிலும் ஒருபடி கூடுதலாக ஸ்டீவ் ஸ்மித் தனது பங்களிப்பை வழங்குவார் எனவும் ஸ்டாய்னிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement