எனக்கும் வேர்ல்டுகப்ல 30 பால்ல செஞ்சுரி அடிக்க ஆசை தான்.. ஆனா ஒரு விஷயம் – ஜோஸ் பட்லர் வெளிப்படை

Buttler-and-ABD
- Advertisement -

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர் என்ற பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்க எதிரான போட்டியில் 30 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அதிவேக சதமடித்து அசத்தியிருந்தார். அதோடு அந்த போட்டியில் 153 ரன்கள் குவித்த அவர் அதிவேகமாக 150 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

ஏபிடி வில்லியர்ஸ்க்கு முன்னதாக நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இந்த அவரது இந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று பார்க்கப்பட்ட வேளையில் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் வெறியாட்டம் விளையாடி அந்த சாதனையை தகர்த்திருந்தார்.

- Advertisement -

இனிவரும் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் கிட்டத்தட்ட அந்த சாதனையை முறியடிக்கவே முடியாது என்று பார்க்கப்படும் வேளையில் எதிர்வரும் உலக கோப்பை தொடரில் நானும் 30 பந்துகளை சதம் விளாச ஆசைப்படுகிறேன். ஆனால் அது நடக்குமா? என்றால் அது மிக மிக கடினம் தான் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வெளிப்படையான தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பட்லர் பதிலளிக்கையில் கூறியதாவது :

கண்டிப்பாக நான் அதிவேக சதம் அடிக்க முயற்சி செய்வேன். ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு மிக கடினமான காரியமாகவே நினைக்கிறேன். ஏனெனில் ஏற்கனவே நான் ஒருநாள் கிரிக்கெட்டில் 46 பந்துகளில் சதம் அடித்திருக்கிறேன். அதிலும் 16 பந்துகளை குறைத்து சதம் அடிக்க வேண்டும் என்றால் அது இயலாத காரியம் இன்றே நினைக்கிறேன். அதன் காரணமாக ஏபிடி-யின் அந்த சாதனை பாதுகாப்பாகவே இருக்கிறது என்றும் நினைக்கிறேன்.

- Advertisement -

நான் விளையாடிய ஆட்டங்களில் டி20 உலக கோப்பையில் சார்ஜாவில் இலங்கை அணிக்கு எதிராக சதம் அடித்த போட்டியும், அதேபோன்று கடந்த 2018 ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 94 ரன்கள் அடித்ததையும் என்னுடைய சிறந்த ஆட்டமாக பார்க்கிறேன் என பதில் அளித்தார்.

இதையும் படிங்க : 2023 உ.கோ : சொந்த ஊரா இருந்தாலும் அதை செய்யலைன்னா தோல்வி கன்ஃபார்ம் – இந்தியாவின் வாய்ப்பு பற்றி ஆம்ப்ரோஸ் பேட்டி

மேலும் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அனைத்து வகையான பங்களிப்பையும் வழங்குவேன் என்றும் தற்போது அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான வீரர்கள் என்பதினால் நாங்கள் ஒரு சவாலான அணியாகவே அனைத்து அணிகளுக்கு எதிராகவும் விளையாட இருக்கிறோம் என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement