2023 உ.கோ : சொந்த ஊரா இருந்தாலும் அதை செய்யலைன்னா தோல்வி கன்ஃபார்ம் – இந்தியாவின் வாய்ப்பு பற்றி ஆம்ப்ரோஸ் பேட்டி

Curtly Ambrose 2
- Advertisement -

ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2013 ஐசிசி உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கிய நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா அதன் பின் 2021 டி20 உலகக்கோப்பை தவிர்த்து கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் செமி ஃபைனல், ஃபைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் முக்கிய தருணங்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் நெஞ்சங்கள் உடைபட்டுள்ள இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் இம்முறை பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சொந்த மண்ணில் கோப்பையை வென்று ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

ஆதரவும் அழுத்தமும்:
இந்நிலையில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எக்ஸ்ட்ரா அழுத்தம் இருப்பது இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் தரமான வீரர்களைக் கொண்டுள்ள இந்தியா அழுத்தமான போட்டிகளில் தைரியமாக சிறப்பாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் இல்லையேல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளிடம் தோல்வி நிச்சயம் என்று வெளிப்படையாக பேசும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

“நீங்கள் நிச்சயமாக வாய்ப்பில் முன்னே இருக்கிறீர்கள். ஆனால் அதற்கு போட்டியாக வலுவான எதிரணிகளும் இருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்றவை சவாலை கொடுக்கும் முன்னணி அணிகளாகும். இங்கே முக்கியமான விஷயம் என்னவெனில் அழுத்தமான நேரங்களில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதாகும். மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியா மீது எக்ஸ்ட்ரா அழுத்தத்தை உண்டாக்கும்”

- Advertisement -

“ஏனெனில் மைதானங்களில் வெற்றியை மட்டும் பார்க்கும் ரசிகர்களை போல ஊடகங்கள் அனைத்தையும் கதைகளாக எழுதும். அதனால் இந்த உலகக் கோப்பையில் இந்தியா மீது அதிக பில்டப் இருக்கும். இருப்பினும் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் சூழ்நிலைகளை இந்திய அணியை தவிர்த்து வேறு யாருக்கும் அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இதற்கு முன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை வைத்து வெளிநாடுகளும் இங்குள்ள சூழ்நிலைகளை அறிவார்கள்”

இதையும் படிங்க:

“அதனால் உங்களுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது பெரிய சாதகத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எனவே அதில் நீங்கள் சிறப்பாக விளையாடாமல் போனால் நிச்சயம் தோல்வியடைவீர்கள். ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் கலந்த பல வருடங்களாக உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இருப்பினும் வெற்றிக்கான பாதை சுலபமாக இருக்காது. அதை சாதிக்க இந்தியா களத்தில் சிறந்து விளங்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement