முதல் 2 போட்டி மட்டுமல்ல.. எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் கோலி விளையாட வாய்ப்பில்லை – ஏன் தெரியுமா?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரரான விராட் கோலி தொடர் துவங்க சில நாட்கள் இருக்கும் வேளையில் அணியில் இருந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து முதல் 2 போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும் நிச்சயம் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் விராட் கோலி வெளியேறிய போது பி.சி.சி.ஐ வெளியிட்ட அறிக்கையில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காகவே அணியில் இருந்து விலகியுள்ளார் என்றும் அவரது விலகல் குறித்த எந்த யூகங்களையும் வகுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தது.

- Advertisement -

அதே வேளையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் விராட் கோலி இரண்டாவது குழந்தைக்காக காத்திருப்பதால் தான் இந்த தொடரில் இருந்து விலகியதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கும் விராட் கோலி அணிக்கு திரும்ப முடியாது என பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : தற்போதைக்கு விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பும் நிலையில் இல்லை.

- Advertisement -

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியிருந்த வேளையில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அணியில் இணையும் விருப்பத்தையும் அவர் இதுவரைக்கும் யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. அதோடு அவர் தற்போதுள்ள சூழலில் எங்கு இருக்கிறார் என்பது கூட பலருக்கும் தெரிய வாய்ப்பு இருக்காது.

இதையும் படிங்க : இதெல்லாம் 2013இல் ஆரம்பிச்சது.. விராட் – ரோஹித் ஆகியோரில் கோட் யார்? ஷமி அட்டகாசமான பதில்

எனவே நிச்சயம் அவர் ஒரு நல்ல செய்தியை அறிவித்துவிட்டு அதன் பின்னரே இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பிருக்கிறது என்றும் அதுவரை இந்த டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் பங்கேற்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது. அப்படி பார்க்கையில் நிச்சயம் விராட் கோலி தனது இரண்டாவது குழந்தையின் பிறப்புக்கு பின்னரே இந்திய அணியில் இணைவார் என்று தெரிகிறது.

Advertisement