இதெல்லாம் 2013இல் ஆரம்பிச்சது.. விராட் – ரோஹித் ஆகியோரில் கோட் யார்? ஷமி அட்டகாசமான பதில்

Mohammed Shami
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். அதில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் விளாசி ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

இருப்பினும் நிதானம் பிரதானம் என்பது போல் ஆரம்பம் முதலே சீரான வேகத்தில் விளையாடி வரும் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற அபாரமான சராசரியில் ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் 26000+ ரன்கள் 80 சதங்கள் அடித்துள்ள அவர் உலக சாதனைகளை படைத்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செலுத்த வருகிறார்.

- Advertisement -

ஷமி பாராட்டு:
அதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரில் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) எனப்படும் வரலாற்றின் மகத்தான வீரர் யார் என்ற விவாதம் ரசிகர்களிடையே நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் நிறைய சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாராட்டும் முகமது ஷமி கேப்டன் ரோஹித் சர்மா உலகின் ஆபத்தான பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதற்கான முதல் படி 2013 – 2014 காலகட்டங்களில் துவங்கியதாகவும் ஷமி தெரிவித்துள்ளார். அந்த வகையில் 2023 உலகக் கோப்பையில் சிராஜ், பும்ரா ஆகியோர் அடங்கிய தங்களுடைய செயல்பாடுகள் வருங்கால பவுலர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று தெரிவிக்கும் ஷமி இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவர் நிறைய சாதனைகளை உடைத்துள்ளார். நான் விராட் சிறந்தவர் என்று கருதுகிறேன். ரோகித் சர்மா இந்த உலகிலேயே மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன். அனைவரும் 2023 உலகக் கோப்பையில் நாங்கள் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பற்றி பேசுகின்றனர். இருப்பினும் அந்த மொத்த படத்தையும் நீங்கள் பார்க்க விரும்பினால் 2013 – 2014க்கு திரும்பி செல்ல வேண்டும்”

இதையும் படிங்க: நான் ஷேன் வார்னே மாதிரி.. அந்த இந்திய வீரரை அவுட்டாக்குவேன்.. ரெஹன் அஹ்மத் வெளிப்படை

“தற்போது உண்மையை நீங்கள் பார்க்க வேண்டுமெனில் இந்த உலகக் கோப்பையில் நாங்கள் 3 பவுலர்கள் மட்டும் நன்றாக செயல்பட்டோம். அந்த வகையில் வருங்கால பவுலர்களுக்கு நாங்கள் பெஞ்ச் மார்க்கை உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷமி அடுத்ததாக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement