நான் ஷேன் வார்னே மாதிரி.. அந்த இந்திய வீரரை அவுட்டாக்குவேன்.. ரெஹன் அஹ்மத் வெளிப்படை

Rehan Ahmed
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் அறிமுகமாக களமிறங்கிய டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர் ஆகிய ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்தனர் என்றே சொல்லலாம்.

இருப்பினும் 2022 பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் அறிமுகமான ரீஹன் அஹ்மத் மட்டும் இத்தொடரில் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால் மிகையாகாது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே போல் தாம் பந்து வீசுவதாக உணர்வதாக ரீஹன் அஹ்மத் கூறியுள்ளார். அதனால் இத்தொடரில் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தம்மால் சாதிக்க முடியும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

வார்னே மாதிரி:
குறிப்பாக அடுத்து வரும் போட்டிகளில் விராட் கோலி வந்தால் அவரை அவுட்டாவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு ஓவரிலும் நான் ஹாஃல்ப் ட்ரேக்கர் பந்துகளை வீசுகிறேன். நான் ஷேன் வார்னே போல பந்து வீசுவதாக உணர்கிறேன். எனவே அது போன்ற தன்னம்பிக்கை எனக்கு உடைமாற்றும் அறையிலும் கிடைக்கிறது”

“அந்த ஆதரவு என்னை முன்னேறுவதற்கு உதவுகிறது. விராட் கோலிக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். அது மற்றொரு சவால் என்று நினைக்கிறேன். அவர் நம்ப முடியாத வீரர். அவருடைய சாதனைகளே பேசும். எனவே அவரை அவுட் செய்தால் அது நன்றாக இருக்கும். எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள். அதை செய்வேன் என்று நம்புகிறேன். கடந்த போட்டியில் அசத்திய ஜெய்ஸ்வால் நல்ல வீரர்”

- Advertisement -

“அவர் விளையாடிய விதம் எனக்கு பிடித்தது. ஆனால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் எங்களுக்கு எதிராக ரன்கள் அடிக்க மாட்டார் என்று நம்புகிறேன். இருப்பினும் சுப்மன் கில் போல சிறப்பாக விளையாடிய வீரர்களை நீங்கள் மதிக்க வேண்டும். விசாகப்பட்டினம் நடந்த போட்டியில் நாங்கள் இலக்கை தொடுவதற்கு வாய்ப்புகள் இருந்தும் அதை நாங்கள் அடிக்கவில்லை”

இதையும் படிங்க: ஐபிஎல்க்கு போட்டியா வந்துட்டோம்.. இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்திருக்கோம்.. இங்கிலாந்து லெஜெண்ட் பேட்டி

“அந்த போட்டியில் எங்களை நல்ல இடத்தில் நாங்கள் கொண்டு வந்தோம். இந்திய மண்ணில் 400 ரன்களை எங்களால் துரத்த முடியும் என்று இங்கிலாந்தினர் நம்பிக்கை வைத்ததே எங்களுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement