ஐபிஎல்க்கு போட்டியா வந்துட்டோம்.. இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்திருக்கோம்.. இங்கிலாந்து லெஜெண்ட் பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. அதனால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற அந்த அணியை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல பேட்டிங் செய்யும் யுக்தியை இங்கிலாந்து கடைபிடித்து வருகிறது.

அதை பின்பற்றி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வரும் அந்த அணி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தது. அதை முதல் போட்டியில் செய்தும் காட்டிய அந்த அணி இரண்டாவது போட்டியில் 399 ரன்கள் இலக்கை 70 ஓவர்களில் அடித்து முடிப்போம் என்று சவாலும் விடுத்தது. ஆனால் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட தவறிய அந்த அணி அதிரடியாக விளையாட முயற்சித்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஐபிஎல் தொடரை மிஞ்சி:
எனவே பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் அதிரடியான அணுகு முறையை ஜெஃப்ரி பாய்காட் போன்ற சில முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய காலங்களில் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது மைதானங்கள் காற்று வாங்கும் என்று முன்னாள் வீரர் இயன் போத்தம் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது இங்கிலாந்து அதிரடியாக விளையாடுவதை பார்ப்பதற்காகவே ஐபிஎல் தொடரை மிஞ்சும் அளவுக்கு இந்திய மைதானங்களில் ரசிகர்கள் கூடுவதாக பாராட்டும் அவர் இது பற்றி சென்கியூ 693 இணையத்தில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ரசிகர்கள் கூட்டத்தை பார்க்க வேண்டும். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க கூட்டம் மீண்டும் வந்துள்ளது. 20 – 30 வருடங்கள் முன்பாக இந்தியாவில் விளையாடும் போது மைதானங்கள் காற்று வாங்கும்”

- Advertisement -

“திடீரென அங்கே ஐபிஎல் மற்றும் ஒருநாள் போட்டிகள் ரசிகர்களை இழுத்தது. ஆனால் தற்போது ரசிகர்கள் அங்கே பஸ்பாலை பார்ப்பதற்காக வந்து காத்திருக்கின்றனர். எனவே ரசிகர்கள் மைதானத்திற்கு வரவேண்டுமெனில் நீங்கள் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். ஏனெனில் ரசிகர்கள் ஒரு மணி 1.2 ரன் ரேட்டில் ரன்கள் அடிப்பதை பார்க்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் அதிரடியாக விளையாடுவதையே விரும்புவார்கள். அப்படி விளையாடும் போது ஒரு சில தோல்விகள் கிடைக்கும்”

இதையும் படிங்க: என்ன ஒரு அற்புதமான பவுலர்.. பும்ராவிடம் நானே பயப்படும் ஒரு விஷயம் அது தான்.. ஏபிடி பாராட்டு

“அந்த வகையில் விளையாடி இங்கிலாந்து 15 போட்டிகளில் 12 வெற்றிகளை கண்டுள்ளது. எனவே அவர்களால் டெஸ்ட் போட்டிகள் நீண்ட காலம் கழித்து மூச்சு விட துவங்கியுள்ளது” என்று கூறினார். அதாவது இங்கிலாந்தின் அதிரடியான பஸ்பால் ஆட்டம் இந்திய மைதானங்களில் கூட்டத்தை அதிகரித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்துவதாக இயன் போத்தம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement