என்ன ஒரு அற்புதமான பவுலர்.. பும்ராவிடம் நானே பயப்படும் ஒரு விஷயம் அது தான்.. ஏபிடி பாராட்டு

AB De Villiers 2
- Advertisement -

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. அந்த வெற்றிக்கு மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா கம்பேக் கொடுக்க உதவினார்.

குறிப்பாக முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது 209 ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் இக்கட்டான சூழ்நிலையில் சுப்மன் கில் 104 ரன்கள் குவித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஆனால் அவர்களை பின்னுக்குத் தள்ளி ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு பும்ரா அபாரமாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:
எடுத்துக்காட்டாக கடந்த போட்டியில் 196 ரன்கள் அடித்து தோல்வியை கொடுத்த ஓலி போப்பின் 3 ஸ்டம்ப்புகளையும் யார்கர் பந்தால் பறக்க விட்ட பும்ரா கேப்டன் பென் ஸ்டோக்ஸை துல்லியமான யார்கரால் கிளீன் போல்ட்டாக்கினார். அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத பென் ஸ்டோக்ஸ் பேட்டை கீழே விட்டு “இப்படி போட்டால் எப்படி அடிக்கிறது” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தது ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது.

இந்நிலையில் பும்ரா அற்புதமான பவுலர் என்று ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். மேலும் தம்முடைய காலத்தில் பும்ராவை எதிர்கொள்ளும் போது துல்லியமான யார்க்கர் பந்துகள் தமக்கு அச்சுறுத்தலை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “பும்ரா அபாரமாக பந்து வீசினார். பும்ரா என்ன ஒரு அற்புதமான பவுலர். அவர் மற்ற இந்திய வீரர்களை சிறப்பாக பந்து வீசி பின்னுக்கு தள்ளினார். அதனால் மற்ற இந்திய பவுலர்களின் பவுலிங் நன்றாக தெரியவில்லை”

- Advertisement -

“இருப்பினும் அவர்கள் பும்ரா சிறப்பாக பந்து வீசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். இது தனிநபர் விளையாட்டு அல்ல. அதுவே இந்திய பவுலிங் கூட்டணியில் நான் விரும்பும் அம்சமாகும். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் பும்ராவுக்கு யார்க்கர் பந்துகள் தான் பெரிய பலமாகும். பும்ராவுக்கு எதிராக நான் விளையாடும் போதெல்லாம் அவரின் யார்க்கர் பந்துகள் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுக்கக் கூடியது என்று நான் நினைப்பேன்”

இதையும் படிங்க: அவங்க பேச்சால் கெட்டுப்போகாதீங்க.. இந்தியாவை சாய்க்க அதை மட்டும் செய்ங்க.. ரூட்டுக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

“யார்க்கர் பந்துகளை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கூட அவர் நிறைய விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்” என்று கூறினார். இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் பவுலராக முன்னேறிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக பும்ரா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement