அவங்க பேச்சால் கெட்டுப்போகாதீங்க.. இந்தியாவை சாய்க்க அதை மட்டும் செய்ங்க.. ரூட்டுக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

Micheal Vaughan
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 399 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக அந்த இலக்கை 70 ஓவரில் அடித்து முடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து அணியினர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து வெற்றியை நழுவ விட்டனர். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே 11000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த அனுபவமிகுந்த ஜோ ரூட் களத்திற்குள் வந்ததுமே கண்ணை மூடிக்கொண்டு தூக்கி அடித்து அவுட்டானது இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

கெட்டுப் போகாதீங்க:
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் சொல்லும் பஸ்பால் அணுகுமுறையை நீங்களும் பின்பற்றினால் சாதிக்க முடியாது என்று ஜோ ரூட் மீது முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் 10000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த அனுபவம் கொண்ட நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய மண்ணில் வெல்ல முடியும் என்று ரூட்டுக்கு ஆலோசனை தெரிவிக்கும் அவர் இது பற்றி டெலிகிராஃப் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கு ஒரே வழி தான் இருக்கிறது என்பது போல் செயல்பட்டனர். அவர்கள் முதல் பந்திலிருந்தே ஐந்தாவது கியரில் விளையாடினர். இங்கிலாந்து அணியில் இருக்கும் சில பேட்ஸ்மேன்கள் அவ்வாறு விளையாடுவதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஏனெனில் அவர்கள் அதற்கு பொருந்துவார்கள். ஆனால் ஜோ ரூட் அப்படி விளையாடுவதை மறக்க வேண்டும்”

- Advertisement -

“அவர் ஜோ ரூட்டாக விளையாடி தான் ஏற்கனவே 10000 டெஸ்ட் ரன்கள் அடித்துள்ளார். அவர் பஸ்பால் ஆட்டத்தை பின்பற்றுபவராக இருக்கக் கூடாது. எனவே அணி நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர் ஜோ ரூட் தோளில் கை போட்டு “நீங்கள் உங்களுடைய வழியில் விளையாடுங்கள்” என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது. குறிப்பாக சுழலுக்கு எதிராக அவர் நேர்த்தியாக விளையாடக் கூடியவர்”

இதையும் படிங்க: பஸ்பால் தொடரும்.. அந்த 2 பேரையும் சைலன்ட்டா வெச்சு இந்தியாவை வீழ்த்துவோம்.. ஜோ ரூட் பேட்டி

“ரூட், கிரகாம் கூச் ஆகியோர் இங்கிலாந்து உருவாக்கிய வீரர்களில் சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவர்கள். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட்டாக இருந்தால் அப்படி விளையாடியிருக்க மாட்டார். அவர் இப்படி தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தால் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியாது” என்று கூறினார்.

Advertisement