பஸ்பால் தொடரும்.. அந்த 2 பேரையும் சைலன்ட்டா வெச்சு இந்தியாவை வீழ்த்துவோம்.. ஜோ ரூட் பேட்டி

Joe Root
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை சமன் செய்துள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள இங்கிலாந்து அணியினர் அபுதாபியில் ஸ்பெஷல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதை பயன்படுத்தி மூன்றாவது போட்டியிலிருந்து அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று அந்த அணியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் 2வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மூன்றாவது போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்கள் வரும் போது இன்னும் அதிக பலம் கிடைக்கும் என்பதால் இத்தொடரை இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

சைலன்ட் பண்ணுவோம்:
இந்நிலையில் இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மாவை சிறப்பாக செயல்பட விடாததைப் போல விராட் கோலி வந்தாலும் அவரை அமைதியாக வைத்திருப்போம் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாவது போட்டியில் சந்தித்த தோல்வியால் பின்வாங்காமல் தொடர்ந்து பஸ்பால் ஆட்டத்தை பின்பற்றி அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோரை நீங்கள் நவீன கிரிக்கெட்டின் மகத்தான வீரர்கள் என்று சொன்னீர்கள். எனவே அவர்கள் கவனம் செலுத்துவார்கள். இந்திய பேட்டிங் வரிசையில் அவர்கள் எந்தளவுக்கு சீனியர்கள் என்பதை நாங்களும் அறிவோம். எனவே அவர்கள் இந்த டெஸ்ட் அணியில் பெரிய வேலையை செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும் அவர்கள் மீது ஆரம்பத்திலேயே நாங்கள் டாப்பில் இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறோம்”

- Advertisement -

“அவர்களிடம் பெரிய ரன்கள் குவிக்கும் திறமை உள்ளது. அதனால் அவர்களுக்கு எதிராக சில நேரங்களில் நாங்கள் தோல்வியை சந்தித்த இடத்தில் இருந்தோம். எனவே அவர்களை இந்த தொடர் முழுவதும் அமைதியாக வைத்திருப்பது நன்றாக இருக்கும். இரண்டாவது போட்டியில் சந்தித்த முடிவைத் தாண்டி நாங்கள் அனைவரும் அறிந்த எங்கள் வழியில் விளையாடுவோம்”

இதையும் படிங்க: அதுக்காக காத்திருக்கேன்.. அவர் மட்டும் வந்துட்டா இரக்கமற்ற அணியா மாறிடுவாங்க.. நாசர் ஹுசைன்

“அதுவே எங்களுடைய சிறந்தவற்றை வெளிக்கொண்டு வந்தது. கடைசியாக எங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 5வது டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றிக்கு மிகவும் தொலைவில் இருந்தோம். ஆனால் கடைசியில் நாங்கள் அந்த பெரிய இலக்கை சேசிங் செய்தோம். அதே போல வெற்றி பெற முடியாது என்பது போல் தெரிந்த நிறைய போட்டிகளில் நாங்கள் சாதித்து காட்டினோம். எனவே நாங்கள் நம்பிக்கையை நிறுத்தாமல் தொடர்ந்து விளையாடுவோம்” என்று கூறினார்.

Advertisement