அந்த சாம்பிள மறக்காதீங்க.. 2023 உலக கோப்பையில் அவர் தான் எல்லா எதிரணிக்கும் டேஞ்சரா இருப்பாரு.. அமீர்

Mohammed Amir
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டிகள் நிறைவு பெற்று முதன்மையான போட்டிகள் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் கோளகலமாக நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு அணிகளுக்கு சொந்த மண்ணில் சவாலை கொடுத்து 2011 போல இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

அந்த சூழ்நிலையில் களமிறங்கும் இந்திய அணியில் 2023 ஆசிய கோப்பையை வென்ற புத்துணர்ச்சியுடன் அனைத்து வீரர்களுமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா, கில், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடிய உலக கோப்பையில் அசத்துவதற்கு தயாராக இருக்கின்றனர்.

- Advertisement -

அமீர் பாராட்டு:
இந்நிலையில் அந்த வீரர்களை காட்டிலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தான் அழுத்தமான சூழ்நிலைகளிலும் எதிரணிகளுக்கு சவாலை கொடுக்கப் போகும் ஆபத்தான இந்திய வீரராக இருப்பார் என்று பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பாராட்டியுள்ளார். குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தது போல் இம்முறையும் விராட் கோலி அசத்துவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்தப் போட்டியை பார்த்த போது என்னுடைய அருகில் வஹாப் ரியாஸ் அமர்ந்திருந்தார். அப்போது 3 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்ட போது நான் அவரிடம் இந்தியா இன்னும் தோற்கவில்லை என்று சொன்னேன். குறிப்பாக விராட் கோலி களத்தில் இருக்கும் வரை இந்தியா தோல்வியை சந்திக்காது என்று ரியாசிடம் நான் உறுதியாக சொன்னேன்”

- Advertisement -

“அந்த வகையில் உண்மையாகவே இந்த உலகில் வேறு யாரும் விராட் கோலி போல அப்படி ஒரு அபாரமான இன்னிங்ஸ் விளையாடியிருக்க முடியாது. குறிப்பாக அது போன்ற அழுத்தமான சூழ்நிலையில் விராட் கோலியால் மட்டுமே போராடி வெற்றியை கொண்டு வந்திருக்க முடியும். என்னை கேட்டால் விராட் கோலியின் அதிகாரத்தில் அழுத்தம் என்ற வார்த்தை இருக்காது என்று சொல்வேன்”

இதையும் படிங்க: SL vs AFG : தனி ஒருவனாக மெண்டிஸ் 158 ரன்கள்.. 220 பார்ட்னர்ஷிப் போட்டு இலங்கையை நொறுக்கிய மாஸ் ஆப்கன் ஜோடி

“அத்துடன் விராட் கோலியிடம் கேட்டாலும் அந்த இன்னிங்ஸ் தான் தம்முடைய வாழ்வின் சிறந்தது என்று சொல்வார். எனவே இந்த உலகக் கோப்பையிலும் விராட் நிச்சயமாக அனைத்து எதிரணிகளுக்கும் ஆபத்தானவராக இருப்பார். ஏனெனில் தற்போது அவர் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். மேலும் தற்சமயத்தில் அவருடைய தன்னம்பிக்கை வேறு உயரத்தில் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement