SL vs AFG : தனி ஒருவனாக மெண்டிஸ் 158 ரன்கள்.. 220 பார்ட்னர்ஷிப் போட்டு இலங்கையை நொறுக்கிய மாஸ் ஆப்கன் ஜோடி

SL vs AFG
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 3ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற்ற 8வது பயிற்சி போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு நிசாங்கா 30 ரன்களிலும் கருணரத்னே8 ரன்களில் அவுட்டான போதிலும் 3வது இடத்தில் களமிறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அதற்கு 4வது இடத்தில் களமிறங்கி நிதானமாக விளையாடிய சமரவிக்கிரமா கம்பெனி கொடுத்த நிலையில் எதிர்ப்புறம் ஆப்கானிஸ்தான் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய குஷால் மெண்டில் வேகமாக சதமடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல இரு மடங்கு வேகத்தில் அதிரடி காட்டிய அவர் மொத்தம் 19 பவுண்டரி 9 சிக்சருடன் 158 (87) ரன்கள் குவித்து அடுத்த வீரர்களுக்கு வழி விடுவதற்காக ரிட்டையர்ட் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அதிரடி:
ஆனால் மறுபுறம் கடைசி வரை தடுமாறிய சமரவிக்ரமா 39 ரன்களில் அவுட்டானதை போலவே அடுத்ததாக வந்த அசலங்கா 12, டீ சில்வா 22 போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 300 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை 257/3 என்ற நிலையிலிருந்து 46.2 ஓவரில் 294 ரன்களுக்கு சுருண்டது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து 295 உங்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு இப்ராஹிம் ஜாட்ரான் 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் அடுத்ததாக வந்த ராஹில் ஷா மற்றும் மற்றொரு துவக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இருப்பினும் அப்போது மழை வந்ததால் 42 ஓவரில் 257 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அப்போதும் அதிரடியை குறைக்காத அந்த ஜோடி 100க்கும் ஸ்ட்ரைக் ரேட்டில் இலங்கை பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு ஆப்கானிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. நேரம் செல்ல செல்ல 32 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 220 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது இருவருமே அடுத்த வீரர்களுக்கு வழிவிட்டு ரிட்டையர்டு அவுட்டாகி சென்றார்கள்.

இதையும் படிங்க: AUS vs PAK : 352 ரன்கள்.. அணியின் நலனுக்காக தியாக முடிவெடுத்து.. வெற்றியை ஆஸிக்கு பரிசளித்த பாபர் அசாம்

அதில் குர்பாஸ் சதமடித்து 8 பவுண்டரி 9 சிக்ஸருடன் 119 (92) ரன்களும் ரஹீல் ஷா 93 (82) ரன்களும் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து சென்ற நிலையில் அடுத்ததாக வந்த முகமது நபி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் கடைசியில் நஜிபுல்லா ஜாட்ரான் 15* ரன்களும் ஓமர்சாய் 14* ரன்களும் எடுத்ததால் 38.1 ஓவர்லேயே 261/4 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 23 ரன்கள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அந்த வகையில் 2023 ஆசிய கோப்பையில் இலங்கையிடம் சந்தித்த தோல்விக்கும் பதிலடி கொடுத்து ஆப்கானிஸ்தான் தங்களுடைய உலகக்கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவங்கியது.

Advertisement