AUS vs PAK : 352 ரன்கள்.. அணியின் நலனுக்காக தியாக முடிவெடுத்து.. வெற்றியை ஆஸிக்கு பரிசளித்த பாபர் அசாம்

PAK vs AUS
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டிகளில் அக்டோபர் 3ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 10வது மற்றும் கடைசிப் போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய 351/7 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 48, மிட்சேல் மார்ஷ் 31, ஸ்டீவ் ஸ்மித் 27, மார்னஸ் லபுஸ்ஷேன் 40 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே கணிசமான ரன்களை குவித்தனர். அவர்களை விட மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல் 77, கேமரூன் கிரீன் 50*, ஜோஸ் இங்கிலீஷ் 48 ரன்கள் குவித்து பெரிய ரன்கள் குவிக்க உதவிய நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உசாமா மிர் 2 விக்கெட் சாய்த்தார்.

- Advertisement -

தியாக முடிவு:
அதைத்தொடர்ந்து 352 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பகார் ஜமான் 22, இமாம்-உல்-ஹக் 16, அப்துல்லா சபிக் 12 என டாப் 3 பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த தற்காலிக கேப்டன் ஷடாப் கானும் 9 ரன்களில் நடையை கட்டினார். அதனால் 83/4 என தடுமாறி அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திர பாபர் அசாம் மிடில் ஆர்டரில் களமிறங்கி நங்கூரமாக நின்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக அணி நலனுக்காக 3வது இடத்தை விட்டுக் கொடுத்து விளையாடிய அவர் இப்திகார் அகமதுடன் ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை குவித்தார். அந்த வகையில் சரிவை சரி செய்த அவர் 15 பவுண்டரி 2 சிக்சருடன் 90* (59) ரன்கள் எடுத்த போது சதத்தை தொட விரும்பாத அவர் அணியின் மிடில் ஆர்டரை சோதிப்பதற்காக அடுத்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்த சில ஓவர்களில் இப்திகார் அஹமது 83 (85) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த சல்மான் ஆஹா 10, உஸாமா மிர் 15 ரன்களில் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல மறுபுறம் நிதானமாக விளையாடி நம்பிக்கை கொடுத்த முகமது நவாஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 (42) ரன்களில் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் இமாத் வாசிம் 8 ரன்களில் அவுட்டானதால் 47.4 ஓவரில் விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: அவரோட ஃபார்ம் பற்றி நான் கவலைப்படல.. வார்னே சொன்னதை மறக்காதீங்க.. கவாஸ்கர் மெகா ஆதரவு

மறுபுறம் சிறப்பான வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 3, கேப்டன் கமின்ஸ் மற்றும் மிட்சேல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அந்த வகையில் பாபர் அசாம் விளையாடியிருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அணியின் நலனுக்காக தம்முடைய இடத்தை கொடுத்த அவர் மிடில் ஆர்டரை சோதிப்பதற்காக சதத்தை தியாகம் செய்து கூடவே வெற்றியையும் எதிரணிக்கு பரிசளித்தார் என்றே சொல்லலாம். அதனால் 2 பயிற்சி போட்டிகளிலும் பாகிஸ்தான் 2 தோல்விகளை சந்தித்துள்ளது.

Advertisement