அவரோட ஃபார்ம் பற்றி நான் கவலைப்படல.. வார்னே சொன்னதை மறக்காதீங்க.. கவாஸ்கர் மெகா ஆதரவு

Sunil gavaskar 6
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகிய 3 முக்கியமான வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து ஆசிய கோப்பையில் அபாரமாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பியது ரசிகர்களுக்கு வெல்ல முடியும் என்ற மிகப்பெரிய ஏற்படுத்தியுள்ளது.

அதே போல கில், கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி ஆகிய முதன்மை பேட்ஸ்மேன்கள் 2023 ஆசிய கோப்பையில் ஷாஹீன் அப்ரிடி போன்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். அதே போல முதன்மை ஸ்பின்னராக கருதப்படும் குல்தீப் யாதவ் ஆசிய கோப்பையில் தொடர்நாயகன் விருதும் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் முகமது சிராஜ் ஆசிய கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருதும் என்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கின்றனர்.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
மேலும் பாண்டியா, இஷான் கிசான், ஷமி உட்பட கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மட்டும் பேட்டிங்கில் தடுமாறுவது அணியில் இருக்கும் ஒரே குறையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஃபினிஷராக செயல்பட வேண்டிய 7வது இடத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் 2023ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 1 சிக்சர் மட்டுமே அடித்துள்ளார்.

அத்துடன் சொந்த மண்ணில் கடந்த 10 வருடங்களாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறும் அவருடைய ஃபார்ம் பற்றி கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தரமான வீரராக கருதப்படும் ஜடேஜாவின் ஃபார்ம் பற்றி கவலைப்பட தேவையில்லை என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ராக்ஸ்டார் என்று அடிக்கடி மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னேவின் பாராட்டுகளைப் பெற்ற ஜடேஜா நிச்சயம் இத்தொடரில் அசத்துவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இவ்வளவு அனுபவத்தை கொண்டுள்ள அவர் தற்சமயத்தில் தடுமாறுவதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் ரன்களை எடுப்பதற்கு அவர் மிகவும் வேகமாக ஓடக்கூடியவர் என்பது முக்கியமாகும்”

இதையும் படிங்க: நானா இருந்தா அவருக்கு தான் உ.கோ லெவனில் சான்ஸ் கொடுப்பேன்.. திடீரென கட்சி மாறிய ஹர்பஜன்

“எனவே எதிர்ப்புறமிருந்து அவர் சிங்கிளை டபுள் ரன்களாக மாற்றுவதற்கு அதிகமாக உதவுவார். இது போன்ற சிறிய விஷயங்கள் கூட முக்கியம் என்று நான் கருதுவதால் ஜடேஜாவை பற்றி நான் கவலைப்படவில்லை. மேலும் ரவீந்திர ஜடேஜா எப்போதுமே டாப் பிளேயர். குறிப்பாக ஒரு முறை ஷேன் வார்னே சொன்னது போல அவர் அற்புதமான வீரர்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஐபிஎல் 2023 தொடரில் தடுமாறிய ஜடேஜா தான் கடைசியில் ஃபைனலில் ஃபினிஷிங் செய்து சென்னையின் வெற்றியில் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement