நானா இருந்தா அவருக்கு தான் உ.கோ லெவனில் சான்ஸ் கொடுப்பேன்.. திடீரென கட்சி மாறிய ஹர்பஜன்

- Advertisement -

இந்தியாவில் ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 2011 போல சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் கடைசி நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் காயத்தை சந்தித்து வெளியேறிய அக்சர் பட்டேலுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டார்.

சொல்லப்போனால் 2022 ஜனவரிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவருக்கு இந்த வாய்ப்பு ஒரு கட்டத்தில் அசாத்தியமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடது கை ஸ்பின்னர்களாக இருக்கும் சூழ்நிலையில் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் வேண்டும் என்பதற்காக 2011 உலகக்கோப்பை உட்பட பல வெற்றிகளில் பங்காற்றிய அனுபவத்தை கொண்டுள்ள அஸ்வின் கடைசி நேரத்தில் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

கட்சி மாற்றம்:
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் வீரர்களில் ஹர்பஜன் சிங் முதல் ஆளாக இருந்தார். குறிப்பாக கடந்த பல வருடங்களாகவே விமர்சித்து வரும் அவர் அஸ்வினுக்கு பதிலாக சஹால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் என்னதான் அஸ்வின் தேர்வாகியிருந்தாலும் ஜடேஜா மற்றும் குல்தீப் இருப்பதால் அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தாமாக இருந்தால் உலகக்கோப்பை 11 பேர் அணியில் குல்தீப்புக்கு பதிலாக அஷ்வினை தேர்ந்தெடுப்பேன் என்று திடீரென ஹர்பஜன் கட்சி மாறி பேசி ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைவரும் திறமையை முக்கியம் என்று புரிய துவங்கியுள்ளார்கள்”

- Advertisement -

“அதாவது வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர்களால் விக்கெட்டுகள் எடுக்க முடியாது என்ற அர்த்தமல்ல. சொல்லப்போனால் நானே எதிரணியில் அதிக இடது கை வீரர்கள் இருந்தால் மட்டுமே அஸ்வின் விளையாட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். இருப்பினும் அணி நிர்வாகம் வித்தியாசமாக சிந்திக்கலாம். ஒருவேளை நான் அணியின் கேப்டனாக இருந்தால் 5 சிறந்த பவுலர்களை மட்டுமே தேர்வு செய்வேன். அதில் அஸ்வின் முதல் அல்லது 2வது பவுலராக இருப்பார்”

இதையும் படிங்க: ஒரே கியர்ல ஆடறவங்க வேணாம்..டாப் கியர்ல ஆடுற இவர்தான் இந்திய அணிக்கு வேணும் – சேவாக் கருத்து

“ஏனெனில் 2011இல் எங்களுடன் விளையாடிய அவருக்கு பெரிய தொடரின் அழுத்தங்கள் எப்படி இருக்கும் என்பது நன்றாக தெரியும். எனவே இன்று நான் 5 பவுலர்களை தேர்வு செய்ய வேண்டுமேயானால் அது பும்ரா, ஷமி, சிராஜ், ஜடேஜா மற்றும் அஸ்வினாக இருப்பார்கள்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முதல் போட்டி சென்னையில் நடைபெறுவதால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement