ஒரே கியர்ல ஆடறவங்க வேணாம்..டாப் கியர்ல ஆடுற இவர்தான் இந்திய அணிக்கு வேணும் – சேவாக் கருத்து

Sehwag-and-Rinku
- Advertisement -

இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே சீன நாட்டில் நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் தொடரின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி நேபாள் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் அக்டோபர் மூன்றாம் தேதி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 100 ரன்களையும், ரிங்கு சிங் 37 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நேபாள் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் ஆறாவது வீரராக களம் இறங்கிய ரிங்கு சிங் 15 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று போட்டியை சிறப்பாக பினிஷிங் செய்து கொடுத்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடைசி ஓவரின் போது இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி என அந்த ஓவரில் அவர் 24 ரன்கள் குவிக்கவே இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இப்படி அதிரடியான பினிஷிங்கை கொடுத்துள்ள ரிங்கு சிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் ரிங்கு சிங்கின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது :

இதையும் படிங்க : IND vs NED : மறுபடியும் முதல்ல இருந்தா.. அவங்கள கலாய்ச்ச நமக்கா இந்த நிலைமை.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்

இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் தற்போது ஒரே கியரில் விளையாடும் வீரர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அதிரடியாக டாப் கியரில் விளையாடக்கூடிய வீரர்கள் நமக்கு தேவை அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் இருந்தால் இந்திய அணி இன்னும் அபாயகரமான அணியாக மாறும் என்று சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement