IND vs NED : மறுபடியும் முதல்ல இருந்தா.. அவங்கள கலாய்ச்ச நமக்கா இந்த நிலைமை.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்

Rain Update.jpeg
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் நடைபெறும் பயிற்சி போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. அதில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன்பாக கௌகாத்தியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தன்னுடைய முதல் பயிற்சி போட்டியில் எதிர்கொண்டது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த போதிலும் ஜோராக வந்த மழை ஒரு பந்தை கூட வீச விடாமல் மொத்தமாக ரத்து செய்தது. அதனால் ஆரம்பத்திலேயே இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் மிஞ்சிய நிலையில் 2வது பயிற்சி போட்டி அக்டோபர் 3ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு துவங்கியது.

- Advertisement -

நமக்கா இந்த நிலைமை:
அப்போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை கண்டிப்பாக இந்தியா அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஏற்கனவே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலையும் அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் வீசுவதற்கே தாமதமானது.

அதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பொறுத்திருந்து பார்த்த நடுவர்கள் மழை விடாததால் இப்போட்டியும் ரத்து செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதன் காரணமாக சொந்த மண்ணில் மற்ற அணிகளை விட இந்தியா மட்டுமே பயிற்சி போட்டியில் ஒரு பந்தை கூட எதிர்கொண்டு பயிற்சிகளை எடுக்காமல் நேரடியாக உலக கோப்பையில் களமிறங்க வேண்டிய பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் என்று ஆஸ்திரேலியாவை தோற்கடித்து நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறது. ஆனால் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் மழை காலம் என்பதால் பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது மொத்த ரசிகர்களையும் கடுப்பாக வைத்தது.

இதையும் படிங்க: படு மாஸான லுக்கில் அசத்தல் போட்டோ ஷூட். தோனியின் புது ஸ்டைல் – காரணத்தை பகிர்ந்த ஸ்டைலிஸ்ட்

அப்போது ஒரு தரப்பு இந்திய ரசிகர்கள் இலங்கையை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து விமர்சனங்களையும் செய்தனர். ஆனால் அடுத்த மாதமே இந்தியாவில் ஆசிய கோப்பையை விட மிகப்பெரிய உலககோப்பையில் முதன்மைப் போட்டிகள் துவங்குவதற்கு முன்பாகவே பயிற்சி போட்டிகளில் மழை வேலையை காட்டுகிறது. அதனால் பயிற்சி போட்டிகளிலேயே இப்படி வெளுத்து வாங்கும் மழை முதன்மை போட்டிகளில் என்ன செய்யப் போகிறதோ என்ற கவலையை வெளிப்படுத்தும் இந்திய ரசிகர்கள் இலங்கையின் நிலமை தற்போது நமக்கு வந்து விட்டதே என்று பரிதாப கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

Advertisement