படு மாஸான லுக்கில் அசத்தல் போட்டோ ஷூட். தோனியின் புது ஸ்டைல் – காரணத்தை பகிர்ந்த ஸ்டைலிஸ்ட்

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 3 ஆண்டுகளாகி இருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பேசப்படும் வீரராகவே திகழ்ந்து வருகிறார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்திய வேளையில் அந்த அணிக்கும் தோனி தான் கேப்டனாக இருந்தார்.

தனது கரியரின் கடைசி காலகட்டத்தில் இருக்கும் தோனி ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் தான் மேலும் ஒரு ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தான் அவருக்கு கடைசி தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் தற்போது 42 வயதை எட்டியுள்ள அவர் இனியும் தொடர்ந்து விளையாட முடியாது என்பதால் அடுத்த ஐபிஎல் தொடரானது அவருக்கு கடைசி தொடராக அமையும். இந்நிலையில் தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் இருந்தது போன்ற கடைசி கட்டமும் இருக்க வேண்டும் என்பதனால் தனது தலைமுடியை தோனி வளர்த்து வருவதாக பலரும் பேசி வந்தனர்.

இந்நிலையில் தற்போது தோனி புதிய லுக்குடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. மேலும் அது குறித்து அவரது ஹேர் ஸ்டைலிஷ் ஆலிம் ஹாக்கிம் என்பவர் தெளிவான விளக்கம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட அந்த கருத்தில் :

- Advertisement -

தோனியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. அவரைப் போன்ற ஒருவருடன் இணைந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தோனி மிகவும் ஷாட்டாக முடி வெட்டி கொண்டிருந்தார். அப்பொழுது தோனி என்னிடம் ஒரு புகைப்படத்தை காண்பித்து இது என்னுடைய ரசிகர்கள் நான் நீண்ட தலைமுடி வைத்திருப்பது போன்று வரையப்பட்ட புகைப்படம் என்று கூறினார். நான் அந்த புகைப்படத்தை கண்டதும் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அந்த அளவிற்கு அந்த ஸ்டைல் அழகாக இருந்தது.

இதையும் படிங்க : உலக கோப்பையில் பாகிஸ்தான் முதல் மேட்ச்லயே நெதர்லாந்திடம் தோற்பாங்க.. நாசர் ஹுசைன் பேட்டி

எனவே நான் தோனியிடம் இதேபோன்று நீங்கள் முடியை வளர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் முடியை வெட்டக்கூடாது என்று நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். அதன்படியே தோனி முடியை வளர்க்கத் தொடங்கினார். அதோடு முடி வளர்ந்த பின்னர் அதனை வெட்டி ஸ்டைல் செய்து கொள்ளலாம் என்று நான் அவரிடம் சொல்லி இருந்தேன். அந்த வகையில் தற்போது அவருக்கு சில திருத்தங்கள் செய்து கலரிங்கும் செய்துள்ளேன் என அவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement