உலக கோப்பையில் பாகிஸ்தான் முதல் மேட்ச்லயே நெதர்லாந்திடம் தோற்பாங்க.. நாசர் ஹுசைன் பேட்டி

Nasser Hussain 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக சொந்த மண்ணில் இந்தியா, நடப்பு இங்கிலாந்து உள்ளிட்ட உலகில் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில் எப்போதுமே தங்களை புறக்கணிக்க நினைக்கும் இந்திய மண்ணில் அனைத்து அணிகளுக்கும் சவாலை கொடுத்து பாபர் அசாம் தலைமையான பாகிஸ்தான் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இருப்பினும் 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்த அந்த அணிக்கு நாசீம் ஷா காயத்தால் வெளியேறியுள்ளது முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் பேட்டிங் துறையில் பாபர் அசாம் மற்றும் முகம்மது ரிஸ்வான் ஆகியோர் தவிர்த்து ஏனைய வீரர்கள் தடுமாறும் நிலையில் முதன்மை ஸ்பின்னரான சபாப் கான் மோசமான ஃபார்மில் இருப்பது மற்றொரு பின்னடைவாக இருக்கிறது.

- Advertisement -

நெதர்லாந்திடம் தோல்வி:
அது போக ஐபிஎல் தொடரில் விளையாடாத காரணத்தால் தற்போதைய அணியில் இருக்கும் அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் தங்களின் கேரியரில் இதற்கு முன் பார்த்திராத இந்திய மண்ணில் புதிய சவாலை சந்திப்பார்கள் என்றே சொல்லலாம். இந்த சூழ்நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் கத்துக்குட்டியான நெதர்லாந்தை தம்முடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

ஆனால் அதில் பாகிஸ்தான் தோற்கும் என்று நாசர் ஹுசைன் அதிரடியாக தெரிவித்துள்ளார். அதாவது வரலாற்றில் கணிக்க முடியாத அணியாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் கத்துக்குட்டியிடம் தோற்றாலும் அதன் பின் கொதித்தெழுந்து சிறப்பாக செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக 2022 டி20 உலக கோப்பையில் ஆரம்பத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்டாலும் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு வந்ததைப் போல் இம்முறையும் பாகிஸ்தான் அசத்தும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இத்தொடரில் பாகிஸ்தான் நல்ல அணியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இருப்பினும் அவர்கள் முதலில் நெதர்லாந்தை தங்களுடைய முதல் போட்டியில் எதிர்கொள்கின்றனர். அதில் அவர்கள் தோற்கலாம். அது தான் பாகிஸ்தான் அணியாகும். ஆனால் அதன் பின் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். எடுத்துக்காட்டாக கடந்த டி20 உலகக் கோப்பையை பாருங்கள். ஆரம்பத்தில் வெளியேறியதாக கருதப்பட்ட அவர்கள் திடீரென ஃபைனலுக்குள் வந்தார்கள்”

இதையும் படிங்க: ஒரு வார்த்தை சொல்லுங்க.. காந்தி பெயரில் மாஸ் பிளான் ரெடி.. இந்தியாவுக்கு அஸ்ரப் கோரிக்கை

“அந்த வகையில் பாதரசம் போல விளையாடும் கிரிக்கெட்டின் பிராண்ட் மற்றும் ஸ்டைலை அவர்கள் கொண்டிருப்பதால் நிச்சயம் இத்தொடரில் பார்க்கக்கூடிய ஒரு அணியாக இருக்கிறார்கள். குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் உங்களுக்கு எதிராக சராசரியான ஸ்கோருக்கு மேல் அடித்துவிட்டால் நீங்கள் அவருக்கு எதிராக வெல்வதில் சிக்கலை சந்திப்பீர்கள்” என்று கூறினார். முன்னதாக கடந்த டி20 உலக கோப்பையில் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் பாகிஸ்தான் அதிர்ஷ்டத்துடன் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பைப் பற்றி குறிப்பிடத்தக்கது.

Advertisement