ஒரு வார்த்தை சொல்லுங்க.. காந்தி பெயரில் மாஸ் பிளான் ரெடி.. இந்தியாவுக்கு அஸ்ரப் கோரிக்கை

Zaka Ashraf 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முன்னதாக அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் 2010க்குப்பின் எல்லை பிரச்சினை காரணமாக சாதாரண இரு தரப்பு தொடர்களில் மோதுவதை மொத்தமாக நிறுத்திவிட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டும் வேண்டா வெறுப்பாகவே விளையாடி வருகின்றன.

இருப்பினும் விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு தருணங்களில் இரு நாடுகளும் இருதரப்பு தொடர்களில் மோதுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றாலும் அது தோல்வியிலேயே முடிவடைந்து வருகின்றன. மேலும் 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டது. ஆனாலும் நாட்டுக்கு செல்ல முடியாது என்பதில் விடாப்பிடியாக இருந்த இந்தியா உங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றியும் கண்டது.

- Advertisement -

புதிய திட்டம்:
அந்த சூழ்நிலையில் கடந்த மாதம் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தானுக்கு நட்பு ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு பாகிஸ்தான் வாரிய தலைவர் ஜாகா அஸ்ரப் கோரிக்கை வைத்த போதிலும் அது இந்திய அரசின் கைகளில் தான் இருக்கிறது என்று ரோஜார் பின்னி மீண்டும் வெளிப்படையாக தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தேசத் தந்தைகளாக கருதப்படும் மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோரது பெயரில் புதிய தொடரை நடத்துவதற்கு பிசிசிஐயிடம் பரிந்துரை செய்ததாக ஜாகா அஸ்ரப் கூறியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் தொடரில் மோதி வருவதை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

அதே போல ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளாகவும் பாரம்பரிய வரலாற்றை கொண்ட நாடுகளாகவும் திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் காந்தி – ஜின்னா என்ற பெயரில் புதிய தொடரில் மோத வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானை போல இந்தியாவும் கிரிக்கெட்டை விரும்பும் நாடாகும். மேலும் உலகிலேயே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை விட வேறு பெரிய போட்டி இருக்க முடியாது என்று அனைவரும் பேசுகின்றனர்”

இதையும் படிங்க: அறிமுக போட்டியிலேயே ரெய்னா, ராயுடுவை மிஞ்சிய சாய் கிசோர்.. தனித்துவமான சரித்திர சாதனை

“எனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதினால் அது ஆஷஸ் தொடரை விட சிறந்ததாக இருக்கும். அதனால் காந்தி – ஜின்னா கோப்பை என்ற பெயரில் அத்தொடரை சுழற்சி அடிப்படையில் இரு நாடுகளிலும் நடத்தலாம் என்று இந்தியாவுக்கு நான் பரிந்துரை செய்துள்ளேன்” என்று கூறினார். இருப்பினும் இதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்குமா என்பது கேள்விக்குறியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement