அறிமுக போட்டியிலேயே ரெய்னா, ராயுடுவை மிஞ்சிய சாய் கிசோர்.. தனித்துவமான சரித்திர சாதனை

Sai Kishore 2
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் நேபாள் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. சீனாவில் இருக்கும் ஹங்கொழு நகரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 202/4 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியான சதமடித்து 100 (49) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் மாஸ் காட்டிய ரிங்கு சிங் 37* (15) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். நேபாள் சார்பில் அதிகபட்சமாக திபேந்திரா சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 203 ரன்களை சேசிங் செய்த நேபாள் முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 179/9 ரன்கள் மட்டுமே எடுத்த தோற்றது.

- Advertisement -

அசத்தல் சாதனை:
அதிகபட்சமாக திபேந்திரா சிங் 32 (15) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற தமிழக வீரர் சாய் கிசோர் தேசிய கீதத்தின் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுதது ரசிகர்களின் நெகிழ்ச்சியடைய வைத்தது.

சமீபத்திய வருடங்களாகவே உள்ளூர் தொடர்களில் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஒரு வழியாக இப்போட்டியில் தாய் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு பெற்ற அவர் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து சிறப்பாக பந்து வீசினார். அத்துடன் ஃபீல்டராக கவுசல் புர்டேல், திபேந்திரா சிங், சொம்பல் கமி ஆகிய 3 நேபாள் வீரர்கள் கொடுத்த கேட்ச்களையும் சாய் கிஷோர் கச்சிதமாக பிடித்தார்

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற தனித்துவமான சரித்திர சாதனையை சாய் கிசோர் படைத்துள்ளார். இதற்கு முன் 2006இல் சுரேஷ் ரெய்னா, 2010இல் பியூஸ் சாவ்லா, 2011இல் மனோஜ் திவாரி, 2014இல் அமபத்தி ராயுடு, 2016இல் ரிஷி தவான், 2016இல் பவன் நெகி, 2023இல் திலக் வர்மா ஆகிய 7 இந்திய வீரர்கள் தங்களுடைய அறிமுக போட்டியில் தலா 2 கேட்ச்கள் பிடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: அறிமுக போட்டியிலேயே ரெய்னா, ராயுடுவை மிஞ்சிய சாய் கிசோர்.. தனித்துவமான சரித்திர சாதனை

அந்த வகையில் அடுத்து வரும் போட்டிகளில் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்பலாம். எனவே வருங்காலங்களில் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்திற்கு சாய் கிஷோர் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement