அவரோட விக்கெட்டை எடுத்து 1 லட்சம் இந்தியர்களை சாய்ச்சது மறக்க முடியாது.. கமின்ஸ் பேட்டி

- Advertisement -

கோலாகலமாக நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாகவே முடிந்தது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா செமி ஃபைனலில் வரலாற்றில் முதல் முறையாக வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து உச்சகட்ட ஃபார்மில் அசத்தியது.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை தவற விட்ட இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

மறக்க முடியாது:
முன்னதாக உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில் எப்படியும் ஒரு லட்சம் ரசிகர்களும் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்தார். அதனால் சிறப்பாக விளையாடி அகமதாபாத் மைதானத்தில் சத்தமே இல்லாத அளவுக்கு இந்தியாவை தோற்கடித்து ஒரு லட்சம் ரசிகர்களையும் அமைதியாக்குவோம் என்று போட்டிக்கு முன்பாக சொன்ன அவர் கடைசியில் அதை செய்தும் காட்டினார்.

இந்நிலையில் 70 வருடங்களுக்குப் பின் உங்களுடைய வயதான காலத்தில் இருக்கும் போது எந்த நிகழ்வை நினைப்பீர்கள் என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு 2023 உலகக்கோப்பை ஃபைனலில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்து ஒரு லட்சம் இந்தியர்களை அமைதிப்படுத்தியதை வாழ்நாளில் மறக்க முடியாது என்று தி ஏஜ் பத்திரிக்கையில் மீண்டும் பட் கமின்ஸ் மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த போது நான் உணர்ச்சிவசப்பட்டேன் என்று நினைக்கிறேன். அந்த விக்கெட்டை எடுத்த பின்பு ஒன்றாக கூடிய எங்களிடம் ஸ்டீவ் ஸ்மித் “பாய்ஸ், மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் சத்தத்தை இரண்டாவதாக மட்டும் கேளுங்கள்” என்று சொன்னார். அதனால் நாங்களும் சிறிது நேரம் இடைநிறுத்தினோம். அப்போது ஒட்டுமொத்த மைதானமும் நூலகம் போல அமைதியாக இருந்தது”

இதையும் படிங்க: 5 ஆவது இந்திய கேப்டனாக சுப்மன் கில் ஐ.பி.எல் வரலாற்றில் நிகழ்த்தவுள்ள சாதனை – விவரம் இதோ

“அங்கே ஒரு லட்சம் இந்தியர்கள் அமைதியாக இருந்தனர். அந்த தருணத்தை நீண்ட காலம் மறக்காமல் நேசிப்பேன்” என்று கூறினார். மேலும் ஆரம்பத்தில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து தங்களுடைய அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் அதன் பின் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் கமின்ஸ் தெரிவித்தார். அந்த வகையில் 6வது கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement