விராட் கோலி அந்த இந்திய ஜாம்பவான் பாதையில் போயிட்டு இருக்காரு.. லாரா பாராட்டு

Brian Lara
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா 6வது முறையாக தட்டி சென்றது. ஆனால் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து உச்சகட்டமாக எதிரணிகளை தெறிக்க விட்டு வந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

இதனைக்கும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பேட்டிங் துறையில் இரட்டை குழல் துப்பாக்கிகளாக எதிரணிகளை எதிர்கொண்டு இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்கள். குறிப்பாக 765 ரன்களை விளாசி ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக போராடியும் விராட் கோலி கோப்பையை வெல்ல முடியாமல் கண் கலங்கியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

லாரா பாராட்டு:
இருப்பினும் அவருடைய ஆட்டத்திற்கு பரிசாக இறுதியில் தொடர்நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் உலகக் கோப்பையை வெல்ல முடியாத நிலைமையில் அந்த விருதை வென்று என்ன பயன் என்பதே அனைவருடைய ரியாக்சனாக இருக்கிறது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையை வெல்லாததால் சிலர் விராட் கோலியின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவார்கள் என்று ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

ஆனால் 2003இல் இதே போல தங்க பேட் விருது வென்றும் கோப்பையை வெல்ல முடியாத சச்சின் டெண்டுல்கரின் பாதையில் விராட் கோலி நடந்து வருவதாக பாராட்டும் லாரா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா உலகக் கோப்பையை வெல்லாததால் விராட் கோலியின் செயல்பாடுகள் பெரிதல்ல என்று நிறைய பேர் சொல்வார்கள் என்பதை நான் அறிவேன். அணி விளையாட்டான கிரிக்கெட்டில் சேர்ந்து வெற்றி பெறுவது உங்களுடைய முதல் இலக்காக இருக்க வேண்டும்”

- Advertisement -

“ஆனால் அணி வெற்றியை தொடர்ந்து தனிநபர் கிரிக்கெட் வீரர்களின் வெற்றியும் முக்கியமாகும். இதைத்தான் இந்த உலகக் கோப்பை முழுவதும் விராட் கோலி செய்து காட்டினார். கிரிக்கெட்டை மாற்றும் அளவுக்கு அவர் தன்னுடைய மரபை எடுத்துச் செல்வது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் அளவுக்கு உருவெடுத்துள்ள அவர் தன்னுடைய மரபை விட்டு செல்வார். மேலும் ஓய்வுக்குப் பின் ஒருநாள் ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் (தன்னையே சொல்லும் லாரா) இங்கிலாந்து பவுலிங்கை எதிர்கொள்வதை அவர் பார்ப்பார்”

இதையும் படிங்க: இப்படி பண்ணா எப்படி முன்னேறுவிங்க.. பாகிஸ்தான் தேர்வுக்குழுவின் அறிவிப்பை விளாசும் ரசிகர்கள்

“மறுபுறம் இந்தியாவில் இருக்கும் நூற்றுக்கணக்கான சேனல்கள் ஒன்றில் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மாஸ்டர் இன்னிங்ஸ் விளையாடுவதையும் பார்ப்பார். அப்போது கண்ணாடியை பார்த்து விராட் கோலி “இடது கை பேட்டிங் எனக்கானதல்ல. அந்த தொலைக்காட்சி திரையில் உள்ள மற்றொருவரை பார். அவரைத்தான் நான் பின்பற்றி வருகிறாய்” என்று சொல்வார். அவர் சொல்லும் நபர் யார் தெரியுமா? சச்சின் டெண்டுல்கர்” என்று கூறினார்.

Advertisement