இப்படி பண்ணா எப்படி முன்னேறுவிங்க.. பாகிஸ்தான் தேர்வுக்குழுவின் அறிவிப்பை விளாசும் ரசிகர்கள்

Pakistan Seletion
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட எஞ்சிய அணிகள் ஏமாற்றத்தை சந்தித்த நிலையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த அந்த அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக அவமானத் தோல்வியை பதிவு செய்தது.

அதனால் பாகிஸ்தான் அணியில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே பாபர் அசாம் தம்முடைய அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தார். அதற்கு முன்பாகவே தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜாம்பவான் வீரர் இன்சமாம்-உல்-ஹக் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

எப்படி முன்னேறுவிங்க:
இந்த நிலைமையில் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக சமீப காலங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிய வாகப் ரியாஸ் நியமிக்கப்பட்டார். அவருக்கு உறுதுணையாக கம்ரான் அக்மல், ராவ் இப்திகார் அஞ்சும் மற்றும் சல்மான் பட் ஆகியோர் துணை தேர்வுக்குழு ஆலோசகர்களாக செயல்படுபவர்கள் என்று பாகிஸ்தான் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் கம்ரான் அக்மல் மற்றும் இப்திகார் ராவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளதை வரவேற்கும் பாகிஸ்தான் சல்மான் பட் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நிறைய எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் முன்னாள் கேப்டனான அவர் கடந்த 2010ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முகமது அமீர், முகமது ஆசிப் ஆகியோருடன் சேர்ந்து அப்பட்டமான சூதாட்டத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

அது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் சிறைக்கு சென்ற அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதில் முகமது அமீர் கூட நாளடைவில் நல்ல பெயரை வாங்கி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2017 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் சல்மான் பட் மீண்டும் கம்பேக் கொடுக்க முயற்சித்தும் கடைசி வரை பாகிஸ்தானுக்காக விளையாட முடியவில்லை.

இதையும் படிங்க: யார் என்ன சொன்னாலும்.. இந்திய அணிக்காக ரோஹித் சர்மா அதை செஞ்சே ஆகணும்.. கங்குலி ஆதரவு

அப்படி பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படுத்தி சூதாட்டம் செய்த ஒரு முன்னாள் வீரரை தேர்வுக் குழு ஆலோசகராக நியமித்துள்ளது கண்டிப்பாக முன்னேற்றத்தை நோக்கிய பாதை கிடையாது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக கேப்டனாக இருந்து சூதாட்டம் செய்த அவர் தற்போது தேர்வுக் குழுவில் மட்டும் சிறப்பாக வேலை செய்து விடுவாரா? என்று பாகிஸ்தான் ரசிகர்களே கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement