- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில் கவாஸ்கருக்கு அடுத்து மாபெரும் சாதனையை நிகழ்த்த விராட் கோலிக்கு – காத்திருக்கும் வாய்ப்பு

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சோபிக்க தவறிய அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்றார்.

சாதனைக்கு காத்திருக்கும் விராட் கோலி :

அதனை தொடர்ந்து இரண்டாவது அடிலெய்டு நகரில் நடைபெற்ற பகலிரவு போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி ஏமாற்றம் அளித்தார். இதன் காரணமாக அடுத்தடுத்து வரும் மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாட தற்போது விராட் கோலி தீவிர வலைப்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

அது குறித்த வீடியோக்களும் தினமும் இணையத்தில் ட்ரென்டாகி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடுத்ததாக பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதன் மூலம் விராட் கோலிக்கு ஒரு மாபெரும் சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் நிகழ்த்தும் வாய்ப்பு காத்திருக்கிறது.

அதனை விராட் கோலி பூர்த்தி செய்வாரா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் இதுவரை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐந்து முக்கிய மைதானங்களான அடிலெய்டு, சிட்னி, மெல்போன், பிரிஸ்பேன் மற்றும் பெர்த் ஆகிய ஐந்து முக்கிய மைதானங்களில் இரண்டு வீரர்கள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்துள்ளனர்.

- Advertisement -

அதில் ஒருவர் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றொருவர் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக், இவர்கள் இருவரை தொடர்ந்து விராட் கோலி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பெர்த், சிட்னி, அடிலெய்டு, மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் சதம் அடித்து விட்டார். ஆனால் பிரிஸ்பேன் நகரில் சதம் அடித்தது கிடையாது.

இதையும் படிங்க : எங்க டீமை விட்டு போனாலும் அந்த விடயம் மாறாது.. கே.எல் ராகுல் குறித்து பேசிய – லக்னோ அணியின் ஓனர்

எனவே தற்போது கடைசி முறையாக ஆஸ்திரேலிய மண்ணிற்கு பயணித்திருக்கும் விராட் கோலி எதிர்வரும் இந்த மூன்றாவது போட்டியில் கோலி சதம் அடித்தால் ஐந்து மைதானங்களிலும் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 12 சதங்களை அடித்துள்ள அவர் ஏழு சதங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -