இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு முக்கிய லீக் போட்டியின் போது லக்னோ அணி தோல்வியை சந்தித்து இருந்த வேளையில் அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுலை அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா மைதானத்தின் உட்புறமே நின்று கொண்டு 100 கேமராக்களுக்கு மத்தியில் அவரை கடுமையாக சாடி இருந்தார். அப்போது ஒரு கேப்டனை இப்படியா தோல்விக்காக வசைபாடுவது இத்தனை மக்களுக்கு முன் வசைபாடுவதா? என்று ரசிகர்களும் சஞ்சீவ் கோயங்காவின் அந்த செயலை விமர்சித்து இருந்தனர்.
அவர்மீது இருக்கும் மரியாதையை போகாது :
அதோடு இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் ஒருவரை இவ்வாறு நடத்தக்கூடாது என்ற கண்டனங்களையும் எழுப்பி இருந்தனர். அந்த நிகழ்விலிருந்து கே.எல். ராகுலுக்கு லக்னோ அணியின் உரிமையாளர் மீது ஒரு மனக்கசப்பு ஏற்பட்டதாக பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மெகா ஏலத்திற்கு முன்னதாக லக்னோ அணியிலிருந்து கே.எல் ராகுல் விலகி இருந்தார். அவரை தற்போது டெல்லி கேப்டன் அணியானது 14 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில் கே.எல் ராகுல் தங்களது அணியிலிருந்து விலகி இருந்தாலும் அவர் மீதான அன்பும், பாசமும் குறையவில்லை என சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கே.எல் ராகுல் இப்போது மட்டுமல்ல எப்போதுமே என்னுடைய குடும்பத்தில் ஒருவரை போன்றவர். கடந்த சில ஆண்டுகளாகவே எங்கள் அணியை அவர் மிகச் சிறப்பாக வழிநடத்தி வந்தார்.
தற்போது அவர் எங்களது அணியை விட்டு விலகினாலும் எப்போதுமே அவர் என் குடும்பத்தில் ஒருவரை போன்றவர் தான். அவரது திறமை மீது எனக்கு எப்போதும் சந்தேகம் வந்தது கிடையாது. ஆனால் மைதானத்தில் நான் அப்படி கடுமையாக நடந்து கொண்டதற்கு சில காரணங்கள் இருந்தன. உணர்ச்சி பூர்வமாக இருந்த நேரத்தில் அதன் வெளிப்பாடாக நடந்து விட்டது என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : 10 நாளில் ஆஸியிடம் சென்ற வேகத்தை பறிக்க இந்தியா இதை செய்யனும்.. ஹர்பஜன், கவாஸ்கர் பேட்டி
ஆனால் அந்த நிகழ்வு எங்களது உறவை பாதிக்காது என்று நம்புகிறேன். லக்னோ அணியின் கேப்டனாக அவர் இருந்தபோது நிறைய உரையாடல்கள் இருந்தன. ஆனால் இனிவரும் காலங்களில் அவருடன் நிறைய உரையாடல் இருக்காது. ஆனாலும் அவர் மீதான அன்பும் மரியாதையும் கொஞ்சம் கூட குறையாது என சஞ்சீவ் கோயங்கா கூறியது குறிப்பிடத்தக்கது.



