
இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடத்தை பிடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய வேளையில் முதல் நான்கு இடங்களுக்கான போட்டி மற்ற 8 அணிகளுக்கு இடையே பலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்து தொடரின் மிக முக்கியமான போட்டி இன்று பெங்களூரு நகரில் நடைபெற இருக்கிறது. அதன்படி சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறயிருக்கும் 52-வது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
பலம் வாய்ந்த இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கும் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வேளையில் இன்றைய போட்டியில் விளையாட இருக்கும் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மேலும் 53 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இதுவரை விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் 262 ஆட்டங்களில் விளையாடி 8 சதம் மற்றும் 61 அரைசதங்களுடன் 8,447 ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் முடிவதற்குள் கண்டிப்பா இது நடக்கும்.. கே.எல் ராகுல் உடனான உறவு குறித்து – கெவின் பீட்டர்சன் பேட்டி
இந்நிலையில் இன்றைய சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் மேலும் 53 ரன்களை குவிக்கும் பட்சத்தில் ஐபிஎல் வரலாற்றில் 8500 ரன்களை பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.