கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியை வழிநடத்திய கே.எல் ராகுல் அந்த அணியின் உரிமையாளர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக லக்னோ அணியிலிருந்து வெளியேறி மெகா ஏலத்தில் கலந்து கொண்டார். அப்படி மெகா ஏலத்தில் பங்கேற்ற அவரை மிகப்பெரிய தொகைக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இதன் காரணமாக அவர் டெல்லி அணியை அவர் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும் தான் ஒரு முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாக கே.எல் ராகுல் தெரிவித்ததார்.
கே.எல் ராகுல் உடனான உறவு குறித்து பேசிய : கெவின் பீட்டர்சன்
அதன்காரணமாக அக்சர் பட்டேல் தலைமையில் தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது இந்த நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் வேளையில் இன்னும் நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்றால் கூட அந்த எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் டெல்லி அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக கே.எல் ராகுல் திகழ்ந்து வருகிறார். அவரது சிறப்பான ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் கே.எல் ராகுலும் நானும் நண்பர்கள் ஆகிவிடுவோம் என அந்த அணியின் ஆலோசகரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் இல்லாத நேரங்களில் வர்ணனை செய்து வரும் பீட்டர்சன் இந்திய வீரர்களின் ஆட்டம் குறித்து எப்போதுமே விமர்சனத்தை வைக்கக் கூடியவர். அப்படி கே.எல் ராகுல் குறித்தும் அவர் பலமுறை விமர்சித்துள்ளார். அதற்கு கே.எல் ராகுலும் தனது கருத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இப்படி மாறி மாறி காரசாரமாக மோதிக்கொண்ட இவர்களுக்கு பெரிய நட்பு என்பதெல்லாம் கிடையாது.
ஆனால் தற்போது டெல்லி அணியின் நட்சத்திர வீரராக ராகுல் விளையாடி வரும் வேளையில் அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் கெவின் பீட்டர்சன் கே.எல் ராகுலுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் கெவின் பீட்டர்சன் கே.எல் ராகுல் உடனான தனது உறவு குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கே.எல் ராகுலுடன் என்னுடைய நட்பு எப்படி உள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.
இதையும் படிங்க : அடுத்த ஆண்டுக்கு முன்னதாக சி.எஸ்.கே அணியில் இருந்து கழட்டிவிடப்பட வாய்ப்புள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ
ஆனால் தற்போது அதனை மேம்படுத்தி வருகிறேன். எங்கள் இருவருக்குள் தற்போது நல்ல நட்பு மலர்ந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விடுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது என கெவின் பீட்டர்சன் கலகலப்பாக கூறியது குறிப்பிடத்தக்கது.



