அடுத்த ஆண்டுக்கு முன்னதாக சி.எஸ்.கே அணியில் இருந்து கழட்டிவிடப்பட வாய்ப்புள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

CSK
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய 10 போட்டிகளில் 8 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளதோடு நடப்பு ஆண்டின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் அதிகாரப்பூர்வமாக இழந்தது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பலமான அணியை உருவாக்கும் நோக்கில் சி.எஸ்.கே அணி ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அனுபவ வீரர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சி.எஸ்.கே அணியிலுருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ள 5 வீரர்கள் :

மேலும் அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியே களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்னர் சிஎஸ்கே அணியிலிருந்து பல வீரர்களை வெளியேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணியிலிருந்து கழட்டி விடப்பட வாய்ப்புள்ள 5 வீரர்களை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

விஜய் சங்கர் : நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் என்கிற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட விஜய் சங்கர் 6 போட்டிகளில் விளையாடி 118 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரது சுமாரான ஆட்டம் அனைவரும் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் அவரை நிச்சயம் சி.எஸ்.கே அணி கழட்டி விடப்பட அதிக வாய்ப்புள்ளது.

டேவான் கான்வே : சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக கடந்த 2023 ஆம் ஆண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அவர் அந்த ஆண்டு சாம்பியன் பட்டம் கைப்பற்றவும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு காயம் காரணமாக விளையாடாத அவர் இந்த ஆண்டும் மூன்று போட்டிகளில் விளையாடி 94 ரன்கள் மட்டுமே குவித்துள்ளதால் அவரும் அணியில் இருந்து கழட்டிவிடப்பட அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

ராகுல் திரிபாதி : இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக 3 கோடியே 40 லட்சம் ரூபாய் என்கிற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் பல வாய்ப்புகளைப் பெற்றும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்த ஆண்டு 55 ரன்கள் மட்டுமே குவித்திருந்த அவரை நிச்சயம் சிஎஸ்கே அணி கழட்டிவிட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரை கொண்டுவர யோசிக்கும்.

தீபக் ஹூடா : ராகுல் திரிபாதி போன்றே உள்ளூர் போட்டியில் மிக அனுபவம் வாய்ந்த தீபக் ஹூடா 1 கோடியே 70 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட வேளையில் அவரும் 5 போட்டிகளில் விளையாடி வெறும் 31 ரன்களை மட்டுமே குவித்ததால் அவரும் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தானை ஆசிய கோப்பையிலிருந்து தூக்கிவிட்டு.. அந்த புதிய தொடரை உருவாக்குங்க.. கவாஸ்கர் கோரிக்கை

ரவிச்சந்திரன் அஸ்வின் : மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீண்ட ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் சென்னை அணிக்கு திரும்பிய அவர் 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இவர் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்த வேளையில் அவரும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் அடுத்த ஆண்டுக்கு முன்னர் அவர் சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.

Advertisement