இந்திய கிரிக்கெட் அணி எல்லைப் பிரச்சனை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை நிறுத்தி வைத்துள்ளது. அதே போல 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடுவதையும் இந்தியா நிறுத்தியுள்ளது. அதனாலேயே பாகிஸ்தானில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கை, துபாயில் விளையாடி வெற்றியும் கண்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் இந்திய சுற்றுலாப் பயணிகளின் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் 26 அப்பாவி இந்தியர்கள் இயற்கையை எது ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து சிந்து நதியில் தண்ணீர் வழங்குவதை நிறுத்தியது முதல் யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்தது வரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆசிய கோப்பை 2025:
இந்நிலையில் 2025 ஆசிய கோப்பை டி20 வடிவமாக இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் எல்லைப் பிரச்சினை காரணமாக கண்டிப்பாக பாகிஸ்தான் வந்து இந்தியா அல்லது பொதுவான இடமான இலங்கைக்கு விளையாடாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அது போன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானை தூக்கி விட்டு இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளை கொண்ட புதிய தொடரை உருவாக்கி இந்தியா விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்படி செய்வதால் ஆசிய கவுன்சில் கலையும் என்றும் தெரிவித்துள்ள கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பிசிசிஐ எப்போதும் இந்திய அரசாங்கம் சொல்வதை செய்யும் நிலையில் இருக்கிறது. இந்த ஆசிய கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நடத்த உள்ளன. அதற்குள் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்”
பாகிஸ்தான் இல்லாமல்:
“இல்லையெனில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் விளையாடுவதை நான் பார்க்கப் போவதில்லை. அதன் காரணமாக ஆசிய கவுன்சில் கலைக்கப்படலாம். அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் ஹாங்காங், அமீரகம் போன்ற அணிகளை வரவழைத்து 3 – 4 அணிகள் நடைபெறும் பலதரப்பு தொடரை நடத்தலாம். இவை அனைத்தும் அடுத்த சில மாதங்களில் சூழ்நிலை எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்தது”
இதையும் படிங்க: தோனி ஓய்வானாலும் அவங்க நல்லதுக்கு தான் செய்வாரு.. சிஎஸ்கே ஏலத்தில் அந்த துறையை மாத்தனும்.. கவாஸ்கர் பேட்டி
“ஒருவேளை இந்தியாவும் ஆசிய கவுன்சிலில் இருந்து வெளியேறலாம். இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை வைத்து புதிய தொடரையும் இந்தியா நடத்தலாம். தற்போது நடைபெறும் நிலையை வைத்து பார்க்கையில் ஆசிய கவுன்சில் கலைக்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனெனில் உங்களுடைய கவுன்சிலில் இருக்கும் முக்கியமான 2 நாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஒருவருக்கொருவர் விளையாட்டில் நட்பாக விளையாட முடியாது” என்று கூறினார்.



