இன்னும் 34 ரன் தேவை..சச்சினின் மிகப்பெரிய சாதனையை காலி செய்ய காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

Kohli-and-Sachin
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய 33-ஆவது லீக் போட்டியானது இன்று நவம்பர் 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி இந்த போட்டியில் இரண்டு முக்கிய சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியானது 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் வேளையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

- Advertisement -

இதன்காரணமாக இந்த இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் டக் அவுட்டான விராட் கோலி இந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் விளையாட இருப்பதன் மூலம் விராட் கோலி படைக்கவுள்ள சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 48 சதங்களை விளாசியுள்ள அவர் எப்போதுமே இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் போது சதம் அடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதனால் இன்றைய போட்டியில் சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49-வது சதத்தை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதேபோன்று ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக அவர் 10 சதங்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய போட்டியில் விராட் கோலி 34 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை எட்டாவது முறையாக தொட்ட வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா இன்னும் எத்தனை போட்டிகளில் ஆட மாட்டார்? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ

இதற்கு முன்னதாக சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே ஆண்டில் ஆயிரம் ஒருநாள் ரன்களை ஏழு முறை தொட்டுள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி 34 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அதனை எட்டாவது முறையாக செய்து மாபெரும் சாதனையை படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement