ஹார்டிக் பாண்டியா இன்னும் எத்தனை போட்டிகளில் ஆட மாட்டார்? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ

Hardik-Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியா கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பந்து வீசுகையில் காலில் காயம் ஏற்பட்டு அந்த போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். அதன்பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது அவருக்கான பேட்டிங் வாய்ப்பு வரவில்லை என்பதனால் பேட்டிங் செய்யவும் மைதானத்திற்கு வராத பாண்டியா போட்டியின் இடைவெளியிலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டார்.

அந்த பரிசோதனையின் முடிவில் ஹார்டிக் பாண்டியாவிற்கு தசைக்கிழிவு ஏற்பட்டதன் காரணமாக அடுத்து சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடாமல் இருந்தார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் விளையாடியிருந்தார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலாவது இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் பாண்டியா மீண்டும் எப்போது அணியில் இணைவார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் : தற்போதைக்கு ஹார்டிக் பாண்டியா தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையை முடித்துக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதாவது இலங்கை அணிக்கு எதிராக நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியிலும், அதன் பிறகு நவம்பர் 5-ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் பாண்டியா விளையாட மாட்டார் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காயத்திலிருந்து மீண்டு வரும் ஹார்டிக் பாண்டியா நவம்பர் 12-ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அது மட்டும் நடந்தா ஏமாந்துடுவேன்.. ஒரே மேட்ச்ல என்னை மோசமானவன்னு சொல்லுவீங்க.. ரோஹித் உருக்கம்

ஒருவேளை அப்போதும் அவரால் விளையாட முடியவில்லை என்றால் நேரடியாக அவர் முதல் அரையிறுதி போட்டியில் விளையாடுவார் என்றும் பி.சி.சி.ஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டான ஹார்டிக் பாண்டியா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் அவர் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement