அது மட்டும் நடந்தா ஏமாந்துடுவேன்.. ஒரே மேட்ச்ல என்னை மோசமானவன்னு சொல்லுவீங்க.. ரோஹித் உருக்கம்

Rohit Sharma Press
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. அத்துடன் விராட் கோலி உட்பட பெரும்பாலான வீரர்கள் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் 2011 போல இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

முன்னதாக ஐபிஎல் தொடரில் அசால்டாக 5 கோப்பைகளை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை இந்தியாவுக்காக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் 2023 ஆசிய கோப்பையை வென்றதை இம்முறை உலகக் கோப்பையை வென்று தன்னுடைய தரத்தை நிரூபித்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் இந்தியா சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் கேப்டன்ஷிப் செய்து வருகிறார்.

- Advertisement -

ஒரே மேட்ச் தான்:
இந்நிலையில் 6 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளதால் பாராட்டும் அனைவரும் நாக் அவுட் போன்ற போட்டியில் தோல்வியை சந்தித்தால் தம்மை மோசமான கேப்டன் என்று சொல்வார்கள் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் உலகக்கோப்பையை வெல்லாமல் போனால் தமக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இத்தொடரில் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதாலேயே அதிரடியாக விளையாடுவதாக கூறியுள்ளார்.

இது பற்றி இலங்கை போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “இது எப்படி வேலை செய்யும் என்பது எனக்கு தெரியும். ஒரு மோசமான போட்டி இங்கேயும் அங்கேயும் அமைந்தால் திடீரென நான் மோசமான கேப்டனாக மாறி விடுவேன். ஆனால் உண்மை என்னவெனில் இந்த தொடரில் உலகக்கோப்பைக்கு குறைவாக எது கிடைத்தாலும் அது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகும்”

- Advertisement -

“தற்போது என்னுடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அதே சமயம் அணியின் சூழ்நிலையையும் மனதில் வைத்து விளையாடுகிறேன். களத்திற்கு சென்று காட்டுத்தனமாக பேட்டை சுழற்றி விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய மனநிலைமையாகும். ஒவ்வொரு முறையும் போட்டி துவங்கும் போது ஸ்கோர் போர்ட் ஜீரோவாக இருக்கும்”.

இதையும் படிங்க: எங்க டீம் பவுலர்ஸ் கிட்ட கேட்டுட்டுத்தான் நாங்க பேட்டிங் பண்ணவே போனோம் – ஆட்டநாயகன் வேண்டர் டுசைன் பேட்டி

“நான் களமிறங்கும் போது எவ்விதமான விக்கெட்டும் விழாமல் இருக்கும் என்பதால் துவக்க வீரராக களமிறங்குவது சாதகம் என்று சொல்வீர்கள். ஆனால் கடந்த போட்டியில் நான் அதிரடியாக விளையாடிய போது எதிர்ப்புறம் பவர் பிளே முடிவதற்கு 3 விக்கெட்டுகள் விழுந்ததால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். மேலும் உலகக் கோப்பையில் பல போட்டிகளை பார்த்துள்ளோம். அதில் சிறிய அணிகள் வெல்லும் போது அதை அப்சட் என்று சொல்ல மாட்டேன்” என கூறினார்.

Advertisement