எங்க டீம் பவுலர்ஸ் கிட்ட கேட்டுட்டுத்தான் நாங்க பேட்டிங் பண்ணவே போனோம் – ஆட்டநாயகன் வேண்டர் டுசைன் பேட்டி

Rassie-Van-Der-Dussen
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் இந்திய அணியை தாண்டி முதலிடத்தை பிடித்துள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணி சார்பாக துவக்க வீரர் குவிண்டன் டி காக் மற்றும் மூன்றாவது வீரராக களமிறங்கிய ராசி வேண்டர் டுசைன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்கா அணியின் சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கி 118 பந்துகளை சந்தித்த வேண்டர் டுசைன் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 133 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் வேண்டர் டுசைன் கூறுகையில் :

- Advertisement -

நியூசிலாந்து வீரர்கள் இந்த போட்டியின் ஆரம்பத்தில் மிகச்சிறப்பாக பந்து வீசினர். அதனாலே நாங்கள் போட்டியின் ஆரம்பத்தில் ஓவருக்கு 4 ரன்கள் வரை மட்டுமே குவித்தோம். இந்த போட்டியின் குவிண்டன் டி காக் மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் அரைசதம் கடந்தார். அதன்பிறகு எனக்கும் நல்ல வழி தடத்தை அமைத்து கொடுத்தார். அதன்பிறகு நாங்கள் இருவருமே மிகச்சிறப்பாக விளையாடினோம். பந்து பழையது ஆக ஆக பேட்டுக்கு நன்றாக வந்தது.

இதையும் படிங்க : போற போக்கை பாத்தா சச்சின் ரெகார்ட் உடைஞ்சுருமோ.. ரோஹித்தை மிஞ்சிய டீ காக்.. புதிய உலக சாதனையால் ரசிகர்கள் கவலை

இது போன்ற மைதானத்தில் பந்து சரியான இடத்தில் பிட்ச்சானால் பவுலர்களுக்கு சாதகம் கிடைக்கும் என்பதை எங்களது பந்துவீச்சாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு பந்து வீசினால் இந்த மைதானத்தில் எடுபடும் என்பதனால் அந்த பந்துகளை ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் எங்களது பந்துவீச்சார்களிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். அந்த வகையில் நாங்கள் நியூசிலாந்து அணிக்கு எதிராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவே உணர்கிறோம். போட்டியை கடைசி வரை கொண்டு சென்றால் எங்களது அணியின் வீரர்களால் பெரிய இலக்கிற்கு இட்டுச் செல்ல முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் 300 முதல் 320 ரன்கள் வரை அடிக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் இறுதியில் அதற்கு மேலும் ரன்கள் கிடைத்தது மகிழ்ச்சி என ஆட்டநாயகன் ராசி வேண்டர் டுசைன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement