அன்று மட்டன் சாப்பிட்ட அவர் இன்று இந்தியாவையே பிட்டாக மாற்றியுள்ளார் – கோலியை பாராட்டிய சக வீரர்

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மொஹாலியில் மார்ச் 4ஆம் தேதி துவங்குகிறது. முதல் போட்டி நடைபெறும் மொகாலியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். அவரின் இந்த மைல்கள் போட்டியை முன்னிட்டு மொகாலி மைதானத்தில் நேரடியாக அவரை வாழ்த்த இந்திய ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில் இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ள அவரை கௌரவிக்க பஞ்சாப் கிரிக்கெட் வாரியமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

- Advertisement -

கடந்த 2011ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட துவங்கிய அவர் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் அதன்பின் படிப்படியாக தனது திறமையால் இந்திய அணியில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து இன்று 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 12வது இந்திய வீரராக சாதனை படைக்க உள்ளார். குறிப்பாக சச்சின் ஓய்வு பெற்ற போது அவரின் இடத்தை நிரப்பப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில் அவரைப்போலவே ரன் மெஷினாக எதிரணிகளை பந்தாடி இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் இன்று இந்திய பேட்டியின் ஒரு முதுகெலும்பாக மாறியுள்ளார் என்றால் மிகையாகாது.

மட்டன் சாப்பிட்டார்:
கடந்த 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அப்போது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை அதன்பின் தனது அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வர வைத்தார். மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த அவர் 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

virat1

இப்படி பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் விராட் கோலி படைத்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அவை அனைத்தையும் தாண்டி தனது உடலை கட்டுக்கோப்புடன் பிட்டாக வைத்திருக்கும் விராட் கோலி இன்று பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார். ஆனால் ஆரம்ப காலங்களில் கையில் கிடைக்கும் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு தனது உடலை தாறுமாறாக வைத்திருந்ததாக அவருடன் ஆரம்ப காலங்களில் விளையாடிய முன்னாள் இந்திய வீரர் பிரதீப் சங்வான் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்று பிரதீப் சங்வான் கூறியது பின்வருமாறு. “அவர் ஒரு உணவு பிரியர் என எனக்கு தெரியும். அந்த சமயங்களில் அவர் நிறைய சாப்பிடுவார். அதிலும் நல்ல சுவை கிடைக்கும் உணவு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவ்வளவு கிலோமீட்டர் தாண்டி சென்று அதை ருசித்து விடுவார். மட்டன் ரைஸ் உள்ளிட்ட அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார். 2010இல் டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட வரும் போது அவர் முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார்.

Kohli practice

அதன்பின் 200 மில்லிக்கு மேல் திரவ உணவுகளை உட்கொள்வதை தவிர்த்த அவர் மட்டன் போன்ற உணவுகளை அறவே தவிர்க்க ஆரம்பித்தார். பின்னர் ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர் எப்போதும் உடற்பயிற்சி செய்வதை தவற விடுவதில்லை. சில வீரர்கள் சோம்பேறியாக இருந்து கொண்டு உடற்பயிற்சி செய்வதில் ஏமாற்றுவார்கள். ஆனால் அதுபோல் செய்யாத விராட் கோலியை எப்போதும் உடல்பயிற்சி கூடத்திலேயே அதிகமுறை பார்க்க முடிந்தது” என கூறினார்.

- Advertisement -

இந்தியாவை பிட்டாக மாற்றிய கோலி:
ஆரம்பகாலங்களில் கட்டுப்பாடுகள் இல்லாமல் சாப்பிட்டு வந்த விராட் கோலி அதன்பின் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே இந்தியாவுக்காக நீண்டநாள் விளையாட முடியும் என எண்ணி பிட்டாக மாறத் துவங்கினார் என்று அவருடன் 2008ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையில் விளையாடிய பிரதீப் சங்வான் கூறியுள்ளார்.

Kohli

அவர் கூறுவது போல கிரிக்கெட்டை அடுத்து விராட் கோலிக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் என்றால் அது பிட்னெஸ் ஆகும். பெரும்பாலான நேரங்களில் உடற்பயிற்சி கூடத்திலேயே தனது நேரத்தை செலவிடும் விராட் கோலி அந்த வீடியோக்களை அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் அது வைரலாவதும் வழக்கமான ஒன்றாகும்.

- Advertisement -

குறிப்பாக கடந்த 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற பின் இந்திய அணியில் விளையாடும் அனைவரும் தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும் என அவர் கண்டிப்பு செய்தார். அவரை பார்த்த அனைவரும் நாளடைவில் பிட்டாக இருந்தால் தான் காயம் ஏற்பதை தவிர்ப்பதுடன் வேகமாக ஓடி பீல்டிங் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைக்க துவங்கினார்கள்.

இதையும் படிங்க : உங்களோட 100 ஆவது போட்டியில் நான் எதிர்பார்ப்பது இது மட்டும்தான் – வி.வி.எஸ் லக்ஷ்மன் விருப்பம்

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் நல்ல உடல் தகுதியுடன் ஃபிட்டாக இருந்தால் தான் இன்று இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கான பாராட்டுகள் எப்போதும் விராட் கோலியை சேரும்.

Advertisement