உங்களோட 100 ஆவது போட்டியில் நான் எதிர்பார்ப்பது இது மட்டும்தான் – வி.வி.எஸ் லக்ஷ்மன் விருப்பம்

Laxman
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி இலங்கை அணிக்கு எதிராக மொகாலி மைதானத்தில் துவங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடும் 12-வது வீரர் என்ற பெருமையை பெற உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக 100 போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்பது நாம் அறிந்ததே.

Kohli

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கோலி தற்போது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த நூறாவது போட்டிக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

ஏற்கனவே காலி மைதானத்தில் போட்டி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் ரசிகர்களின் தொடர் கோரிக்கைகள் காரணமாக இந்த போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 100-வது போட்டியில் விளையாட இருக்கும் கோலிக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் வேளையில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வி.வி.எஸ் இலட்சுமணனும் தற்போது தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. அந்த சாதனையை படைக்க இருக்கும் விராட் கோலிக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது 2011-ம் ஆண்டு அவர் அறிமுக போட்டியில் விளையாடியதில் இருந்து தற்போது வரை ஒரே மனநிலையுடன் தான் உள்ளார். அவருடைய பேட்டிங் திறனுக்கு காரணமே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அதன்மூலம் முன்னேற்றத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர் விராட் கோலி .

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் இந்த 99 டெஸ்ட் போட்டிகளிலும் மிகச்சிறந்த வீரராக விளங்கியிருக்கிறார். எனக்கு விராத் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியில் வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த 100-வது டெஸ்ட் போட்டியை ஒரு மறக்கமுடியாத போட்டியாக நீங்கள் மாற்றிக் காட்ட வேண்டும்.

இதையும் படிங்க : விராட் கோலி விளையாடி நான் ரசித்த மிகச்சிறப்பான இன்னிங்ஸ் அதுதான் – கேப்டன் ரோஹித் புகழாரம்

இந்திய வீரர்களில் பலரும் 100-வது போட்டியில் சதம் அடிக்கவில்லை. எனவே நிச்சயம் நீங்கள் எனக்காக இந்த 100-வது போட்டியில் சதம் அடிக்க வேண்டும் அதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்று லட்சுமணன் தனது விருப்பத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement