விராட் கோலி விளையாடி நான் ரசித்த மிகச்சிறப்பான இன்னிங்ஸ் அதுதான் – கேப்டன் ரோஹித் புகழாரம்

Rohit Press
- Advertisement -

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மார்ச் 4ஆம் தேதி துவங்கும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணியினர் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் 2வது போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதி அன்று பகலிரவு போட்டியாக பெங்களூருவில் நடக்க உள்ளது.

Kohli

- Advertisement -

நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கையை பந்தாடிய இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றதை போலவே சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரை கைப்பற்ற இந்திய அணி தயாராக உள்ளது. மறுபுறம் டி20 தொடரில் இடம் பெறாத சில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இலங்கை அணிக்கு திரும்பியுள்ளதால் 20 ஓவர் தொடரில் பெற்ற தோல்விக்கு டெஸ்ட் தொடரில் பதிலடி கொடுத்த இலங்கை போராட உள்ளது.

விராட் கோலி 100வது டெஸ்ட்:
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக முதல் போட்டி நடைபெறும் மொகாலியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டி இந்தியாவுக்காக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பகாலங்களில் தடுமாறினாலும் அதன்பின் இந்திய பேட்டிங் துறையின் முக்கிய பேட்ஸ்மேனாக உருவெடுத்து எதிரணிகளை தெறிக்க விட்டார் என்றே கூறலாம்.

காலப்போக்கில் ஜாம்பவான் சச்சின் ஓய்வுக்குப் பின் அவரின் இடத்தில் விளையாடி ரன் மெஷினாக இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் கடந்த 2014 – 2021 வரை கேப்டனாகவும் செயல்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்றபோது 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர்-1 அணியாக வலம் வர வைத்த அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றிகளையும் பதிவு செய்தார்.

- Advertisement -

மகத்தான விராட் கோலி:
மொத்தத்தில் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை கேப்டனாக பதிவு செய்துள்ள அவர் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற மகத்தான பெயருடன் விடை பெற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறும் அணியாக இருந்த இந்தியா இன்று உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறும் அணியாக உருவெடுத்ததுள்ளது. மேலும் எந்த ஒரு மோசமான தருணத்தில் சிக்கினாலும் கூட அதற்காக எதிரணியிடம் அடிபணியாமல் அதிலிருந்து மீண்டெழுந்து போராடி வெற்றி பெறும் அணியாக இந்தியாவை மாற்றிய பெருமையும் அவரையே சேரும்.

kohli

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் வரலாற்றில் இதர கேப்டன்களைவிட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விராட் கோலி ஆற்றியுள்ள பங்கு அளப்பரியதாகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை முன்னிட்டு சசின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் என பல முன்னாள் இந்திய ஜாம்பவான்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

கேப்டன் ரோஹித் பாராட்டு:
அந்த வகையில் அவருக்கு அடுத்து புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா விராட் கோலியை பாராட்டியுள்ளார். இது பற்றி இன்று நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் தற்போது உள்ள அணியை வைத்து வெற்றிகளை பதிவு செய்ய நான் விரும்புகிறேன். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக விளையாடி வரும் நாம் தற்போது நல்ல நிலையில் உள்ளோம். அதில் நிறைய பங்கு விராட் கோலியை சேரும்” என கூறி தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் இந்த அளவுக்கு வளர விராட் கோலி தான் காரணம் என வெளிப்படையாகப் பாராட்டினார்.

Rohith-1

“விராட் கோலி கேப்டன்ஷிப் செய்ததில் எனக்கு மிகவும் பிடித்த தருணம் கடந்த 2018/19இல் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதாகும். டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்க்கல் போன்ற அசுர பவுலர்கள் நிறைந்த தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடுவது என்பது பலருக்கும் எளிதான காரியமல்ல. ஆனால் அவர்களுக்கு எதிராக விராட் கோலி அபாரமாக விளையாடியது எனக்கு தெரிந்த வரை அவரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆகும்.

- Advertisement -

அது அவர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விளையாடியதை விட சிறந்ததாகும்” என இது பற்றி மேலும் பேசிய ரோகித் சர்மா டேல் ஸ்டைன் போன்ற தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் விராட் கோலி அபாரமாக பேட்டிங் செய்தார் என்று பாராட்டியுள்ளார். அவர் கூறும் அந்த போட்டி கடந்த 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்குப்பின் இந்தியா களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியாகும்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையில் ரோஹித்தை விட இவரை அவுட் செய்தது மறக்கவே முடியாது – ஷாஹீன் அஃப்ரிடி ஓபன்டாக்

அப்போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த விராட் கோலி முதல் இன்னிங்சில் சதம் அடித்து 199 ரன்களும் 2வது இன்னிங்ஸில் 96 ரன்கள் எடுத்தார். அன்று முதல் சச்சின் டெண்டுல்கர் இல்லாத குறையை விராட் கோலி நிவர்த்தி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement