கனவை நிறைவேற்ற முடியாமல் வெளியேறியது வேதனை அளிக்கிறது – தோல்விக்கு பின்னர் விராட் கோலி உருக்கமான பதிவு

INDia
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது முக்கியமான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணியானது 168 ரன்கள் குவித்தது.

பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணியானது பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியோடு வெளியேறிய இந்திய அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் இவ்வேளையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்களும் தங்களது ஏமாற்றத்தை அவர்களது சமூகவலைதள பக்கத்தின் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலியும் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் :

- Advertisement -

“எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலியா கடற்கரைகளிலேயே விட்டு செல்கிறோம்”. எங்கள் மனதில் வேதனை குடி கொண்டுள்ளது. ஒரு அணியாக நிறைய நல்ல நினைவுகளை இங்கிருந்து எடுத்து செல்கிறோம். இதிலிருந்து எங்களை இன்னும் மேம்படுத்தி கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : IPL : பொல்லார்டு மட்டுமல்ல அவரோடு சேர்த்து 4 வீரர்களை கொத்தாக கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ் – லிஸ்ட் இதோ

மேலும் அவர் வெளியிட்டிருந்த மற்றொரு பதிவில் : மைதானத்திற்கு வருகை தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்திய அணியின் சீருடை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதுமே பெருமை கொள்வேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த டிவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement