IPL : பொல்லார்டு மட்டுமல்ல அவரோடு சேர்த்து 4 வீரர்களை கொத்தாக கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ் – லிஸ்ட் இதோ

Pollard Krunal Pandya
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் அரையறுதி போட்டியோடு இந்திய அணி வெளியேறியதை அடுத்து தற்போது இந்திய ரசிகர்களின் கவனம் முழுவதும் மீண்டும் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வரும் நவம்பர் 15-க்குள் மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமில்லாத வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது.

எனவே நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தற்போது தங்கள் அணியிலிருந்து வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக திகழும் மும்பை அணியானது அவர்கள் அணியிலிருந்து வெளியேற்ற இருக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Pollard

அதன்படி மும்பை அணியின் நிர்வாகம் மொத்தம் 10 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு, ஐந்து வீரர்களை மினி ஏலத்திற்கு விடுவித்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது மும்பை அணி நிர்வாகத்தின் சார்பில் அதிகாரவப் பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரரான மும்பை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 144 ரன்களை மட்டுமே குவித்ததாலும் 35 வயதான அவரை இனியும் அணியில் வைத்திருக்காமல் இளம் வீரர்களை தேர்வு செய்யவே அவரை கழட்டி விட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : அவங்க 2 பேரை மட்டும் நம்பி விளையாடுனா. இப்படித்தான் தோத்து போவீங்க – வெளுத்து வாங்கிய மான்டி பனேசர்

அதேபோன்று அவருடன் சேர்த்து ஃபேபியன் ஆலன், டைமல் மில்ஸ், மாயங்க் மார்க்கண்டே மற்றும் ஹிர்திக் சௌக்கின் போன்ற நான்கு வீரர்களையும் மும்பை அணி தற்போது வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement