அவங்க 2 பேரை மட்டும் நம்பி விளையாடுனா. இப்படித்தான் தோத்து போவீங்க – வெளுத்து வாங்கிய மான்டி பனேசர்

Monty-Panesar-and-Virat-Kohli
- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடிலெயிடு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவிக்கவே பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 16 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 170 ரன்கள் குறித்து பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். அதே வேளையில் கோப்பையை கைப்பற்றும் என்று கருதப்பட்ட இந்திய அணியானது இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

IND-Team

- Advertisement -

இப்படி இந்திய அணி இந்த முக்கியமான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் பெரிய அதிருப்தியையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இதற்கு முன்னதாகவே பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்திய அணி குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் வேளையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசர் இந்திய அணி பெற்ற இந்த தோல்விக்கு காரணம் இரண்டு பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி விளையாடியதுதான் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பெருமளவு விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை மட்டும்தான் நம்பி விளையாடியதாக நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் இருவர் மட்டுமே இந்த தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி இருந்தாலும் முக்கியமான பல வீரர்கள் இந்த தொடரில் சோபிக்க தவறி உள்ளனர்.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

குறிப்பாக கே.எல் ராகுல் சிறிய அணிகளுக்கு எதிராக ரன்களை குவிக்கிறார். அதேவேளையில் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும் போது அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. அதேபோன்று ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் என யாராலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. மேலும் கூடுதலாக பந்துவீச்சு துறையில் சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் பட்டேல் மற்றும் அஷ்வின் ஆகியோரால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

- Advertisement -

என்னதான் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருபுறம் சுழற்பந்து வீச்சாளர்களிடம் இருந்து ரன்கள் கசியும்போது எதிரணிக்கு அது சாதகமாக அமைந்துவிட்டது. மேலும் புவனேஸ்வர் குமாரிடம் இருந்து நல்ல ஸ்விங் பவுலிங் வெளிப்படும் என்று ரோகித் சர்மா எதிர்பார்த்தார். ஆனால் இந்த தொடரில் அவரிடம் இருந்து அதுவும் வெளிப்படவில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் விளையாடும் போது இந்த பிரச்சனை உங்களுக்கு ஏன் வரல? – கவாஸ்கர் அடுக்கடுக்கான கேள்வி

இந்திய அணி பல நட்சத்திர வீரர்களை தங்கள் அணியில் கொண்டு இருந்தாலும் தற்போதைய பார்ம் என்ன என்பதை கணித்து சில திட்டங்களை ரோகித் சர்மா மாற்றி அமைத்திருக்க வேண்டும். ஆனால் அதை எதுவும் செய்யாமல் இந்த தொடருக்காக அவர்கள் தயாராகி வந்ததாலே தோல்வியை தழுவி தற்போது வெளியேறியுள்ளனர் என மான்டி பனேசர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement