ஐபிஎல் விளையாடும் போது இந்த பிரச்சனை உங்களுக்கு ஏன் வரல? – கவாஸ்கர் அடுக்கடுக்கான கேள்வி

Gavaskar
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம் போல அழுத்தமான நாக் அவுட் சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. இத்தனைக்கும் பாகிஸ்தான் போன்ற அணிகளை விட உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியான திகழும் இந்திய அணியில் இருக்கும் அனைவருமே உலகக் கோப்பையை மிஞ்சும் அழுத்தம் வாய்ந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள்.

ஆனாலும் அவர்களால் வெறும் ஒரு நாக் அவுட் போட்டியை சமாளித்து கோப்பை வெல்ல முடியாவிட்டால் பின்பு எதற்கு ஐபிஎல் என்று ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் ஐபிஎல் தொடரில் 10 – 15 கோடிகளுக்காக உயிரைக் கொடுத்து விளையாடும் கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் நாட்டுக்காக சுமாராக விளையாடுவதாகவும் ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சிக்கிறார்கள். அதனால் இவர்களெல்லாம் காசுக்காக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவதற்கு சரியானவர்கள் என்று சமூக வலைதளங்களில் வெளிப்படையாக விமர்சிக்கும் ரசிகர்கள் வாய்ப்புக்காக தவமாய் காத்துக் கிடக்கும் இளம் வீரர்களை தேர்வு செய்யுமாறு கோரிக்கை வைக்கிறார்கள்.

- Advertisement -

தேசப்பற்று இல்லை:
அப்படி அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் டி20 உலக கோப்பையிலிருந்து பெட்டி படுக்கையை கட்டிய இந்தியா அடுத்ததாக அருகில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணித்து அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. ஆனால் அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்குவதால் ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் நாடு திரும்பியுள்ளார்கள். இந்தத் தொடர் மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாகவே இது போன்ற இருதரப்பு தொடர்களில் ஓய்வெடுக்கும் நட்சத்திர சீனியர் வீரர்கள் உலகக்கோப்பை கொண்ட பெரிய தொடர்களில் மட்டும் ராஜாவைப் போல் களமிறங்குகிறார்கள்.

ஆனால் அவர்கள் இல்லாத சமயங்களிலும் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதால் வரும் காலங்களில் சீனியர்களுக்கு டாட்டா காட்டி விட்டு அனைத்து தொடர்களிலும் இளைஞர்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டுமென முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாடும் நீங்கள் நாட்டுக்காக இந்த உலகக் கோப்பையில் வெறும் 6 போட்டிகளில் விளையாடியதும் அதிகப்படியான பணிச் சுமையை சந்தித்ததால் நியூசிலாந்து தொடர்களில் ஓய்வெடுக்கிறீர்களா? என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாகவே உலகக் கோப்பையை நீங்கள் வெல்லவில்லை என்றால் சில மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் நியூசிலாந்து தொடருக்கான அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பணிச்சுமை என்பதை பற்றி நாம் ஒவ்வொரு முறையும் பேசும் போது அது ஏன் இந்தியாவுக்காக விளையாடும் போது மட்டும் ஏற்படுகிறது? ஆனால் நீங்கள் ஒரு ஐபிஎல் சீசன் முழுவதையும் பல்வேறு நகரங்களுக்கிடையே பயணித்து விளையாடுகிறீர்கள். அப்போதெல்லாம் உங்களுக்கு களைப்பு ஏற்படாதா? அப்போதெல்லாம் உங்களுக்கு பணிச்சுமை ஏற்படாதா? இந்தியாவுக்காக விளையாடும் போது மட்டும் தான் ஏற்படுமா”

Gavaskar

“அதிலும் குறிப்பாக முக்கியமற்ற நாடுகளுக்கு எதிராக விளையாடும் போது தான் ஏற்படுமா? உங்களுடைய இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது. ஏனெனில் முழுமையாக ஃபிட்டாக இருப்பதால் களத்தில் விளையாடும் நீங்கள் எப்படி பணிச்சுமையை சந்திப்பீர்கள்? அதனால் இதை முதலில் பிசிசிஐ நிறுத்த வேண்டும். நீங்கள் அவர்களை பணம் கொடுத்து அணியில் தேர்வு செய்தீர்கள். ஆனால் பணிச்சுமை என்ற பெயரில் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தால் சம்பளத்தையும் குறைத்துக் கொடுங்கள்”.

இதையும் படிங்க : இந்த குணம் உங்கள விட்டு போகாதா? இந்தியாவை கிண்டலடித்த பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் கொடுத்த பதிலடி என்ன

“அதாவது இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால் சம்பளம் குறைக்கப்படும் என்று அறிவியுங்கள். அவ்வாறு செய்தால் அனைவரும் பணிச் சுமையை மறந்து விட்டு விளையாடுவார்கள். ஏனெனில் ஐபிஎல் என்று வரும் போது அனைவரும் பணிச்சுமையை மறந்து விடுகிறார்கள். எனவே இதில் தேர்வுக்குழு தலையிட்டு அனைத்து வீரர்களிடமும் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement