உ.கோ 2023 பட்டியலில் ரூட், வார்னரை முந்திய கிங் கோலி.. ஐசிசி வெளியிட்ட மாஸ் புள்ளிவிவரம்

Virat Kohli Warner
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் கடுமையான போட்டியிட்டு வருகின்றன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தங்களுடைய முதல் 3 போட்டிகளில் தெளிவான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடித்து தொடர்ச்சியான 3 வெற்றிகளை பதிவு செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் கண்டிப்பாக இம்முறை 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் விளையாடும் அனைத்து அணிகளும் இதுவரை குறைந்தபட்சம் 3 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன.

- Advertisement -

ஐசிசி பட்டியல்:
அதன் முடிவில் ஃபீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு தங்களுடைய அணியின் வெற்றிகளில் எக்ஸ்ட்ராவாக பங்காற்றி வரும் வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பொதுவாகவே உலக கோப்பையில் சிறப்பான கேட்ச்களை பிடிப்பது வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே மிட்சேல் மார்ஷ் கொடுத்த கேட்ச்சை சிறுத்தையை போல் தாவி பிடித்த விராட் கோலி தொடர்ந்து ஃபீல்டிங் துறையில் இந்தியாவுக்கு நிறைய ரன்களை சேமிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் 22.30 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ள அவர் இதுவரை நடைபெற்ற போட்டியில் முடிவில் நம்பர் ஒன் ஃபீல்டராக ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பிடித்து இந்தியாவுக்கு மற்றுமொரு பெருமையை சேர்த்துள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து தங்களது அணிக்காக சிறந்த ஃபீல்டர்களாக செயல்பட்டு வருகின்றனர். ஐசிசி வெளியிட்டுள்ள அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 22.30
2. ஜோ ரூட் : 21.73
3. டேவிட் வார்னர் : 21.32
4. டேவோன் கான்வே : 15.54
5. சடாப் கான் : 15.13
6. கிளன் மேக்ஸ்வெல் : 15.00
7. ரஹ்மட் ஷா : 13.77
8. மிட்சேல் சான்ட்னர் : 13.28
9. பக்கார் ஜமான் : 13.01
10. இஷான் கிசான் : 13.00

இதையும் படிங்க: வம்பிழுக்காதீங்க.. அமைதியா போனாலும் விராட் கோலி என்கிட்ட அதை செஞ்சுட்டே இருப்பாரு.. ரஹீம் ஓப்பன்டாக்

இருப்பினும் உலக அரங்கில் ஃபிட்னஸ்க்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் விராட் கோலி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை என்றும் சொல்லலாம். இதை தொடர்ந்து இந்தியா அக்டோபர் 19ஆம் தேதி தன்னுடைய 4வது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அந்த போட்டியை தவிர்த்து இன்னும் இந்தியாவுக்கு 5 போட்டிகள் இருப்பதால் நிச்சயமாக சொந்த மண்ணில் செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இப்போதே பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement