வம்பிழுக்காதீங்க.. அமைதியா போனாலும் விராட் கோலி என்கிட்ட அதை செஞ்சுட்டே இருப்பாரு.. ரஹீம் ஓப்பன்டாக்

Mushfiqar Rahim
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வலுவாக இருப்பதால் சொந்த மண்ணில் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் சாகிப் அல் ஹசன் தலைமையில் லிட்டன் தாஸ், ரஹீம், டஸ்கின் அகமது போன்ற நல்ல வீரர்களை கொண்டுள்ள வங்கதேசம் 2007 போல இந்தியாவை தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஆனாலும் தற்போதுள்ள ஃபார்முக்கு ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா நிச்சயமாக வங்கதேசத்தையும் அடித்து நொறுக்கி 4வது வெற்றியை பதிவு செய்யும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

ஸ்லெட்ஜ் பண்ணாதீங்க:
இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலியை யாரும் ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டாம் என்று தங்களுடைய பவுலர்களுக்கும் எதிரணி பவுலர்களுக்கும் நட்சத்திர வங்கதேச வீரர் முஸ்பிக்கர் ரஹீம் எச்சரிக்கை கொடுத்துள்ளார். ஏனெனில் தேவையின்றி சீண்டினால் அதையே உத்வேகமாக எடுத்துக்கொண்டு விராட் கோலி அசத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதை விட இந்தியாவுக்கு எதிராக தாம் பேட்டிங் செய்யும் போதெல்லாம் எதுவுமே சொல்லாத போதிலும் விராட் கோலி வேண்டுமென்றே தம்மை ஸ்லெட்ஜிங் செய்து கவனத்தை சீர்குலைத்து அவுட்டாக்க முயற்சிப்பார் என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உலகில் சில பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதை விரும்பி அதையே காரணமாக வைத்து சிறப்பாக செயல்படுவார்கள்”

- Advertisement -

“எனவே நீங்கள் அவரை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள். ஏனெனில் அது அவரை உசுப்பேற்றிவிடும். அதனால் எப்போதும் அவரை முடிந்த வரை சீக்கிரமாக அவுட்டாக்குமாறு எங்களின் பவுலர்களிடம் சொல்வேன். மேலும் ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடும் போது அவர் எப்போதும் என்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார். ஏனெனில் மிகவும் போட்டியை விரும்பக்கூடிய அவர் எந்த போட்டியில் தோற்க விரும்ப மாட்டார்”

இதையும் படிங்க: சென்னை பிட்ச் கஷ்டம்.. நியூசிலாந்தையும் வீழ்த்தும் சான்ஸ் அந்த 2 தவறால் போச்சு.. ஆப்கன் கேப்டன் வருத்தம்

“அந்த போட்டியை நானும் விரும்புகிறேன். இம்முறை இந்தியாவில் அவரை அந்த வகையில் எதிர்கொள்வதை சவாலாக கருதுகிறேன்” என்று கூறினார். முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்திற்கு எதிராக 26 போட்டிகளில் 1437 ரன்களை 65.31 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து எப்போதுமே அசத்தலாக செயல்பட்டு வரும் விராட் கோலி இம்முறையும் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement