சென்னை பிட்ச் கஷ்டம்.. நியூசிலாந்தையும் வீழ்த்தும் சான்ஸ் அந்த 2 தவறால் போச்சு.. ஆப்கன் கேப்டன் வருத்தம்

Shahidhi Afg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 18ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து எளிதான வெற்றி பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 288/6 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 71, கேப்டன் டாம் லாதம் 68, வில் எங் 54 ரன்களும் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக், ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 289 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ஆரம்பம் முதலே நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 34.4 ஓவரில் 139 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரஹீல் ஷா 36 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன், மிட்சேல் சான்ட்னர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அந்த வகையில் கடந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்த ஆப்கானிஸ்தானை அசால்டாக வீழ்த்திய நியூசிலாந்து 4 போட்டியில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மறுபுறம் 109/1 நல்ல நிலையில் இருந்த நியூசிலாந்தை 110/4 என கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான் வில் எங் போன்ற முக்கிய வீரர்கள் கொடுத்த சில கேட்ச்களை இறுதியில் 288/6 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு காரணமானது. இந்நிலையில் ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதும் டெத் ஓவர்களில் ரன்களை கொடுத்ததும் தோல்வியை கொடுத்ததாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

மேலும் சேப்பாக்கம் பிட்ச்சை சரியாக கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ள அவர் அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் போராடி கம்பேக் கொடுப்போம் என்று போட்டியின் முடிவில் நம்பிக்கை தெரிவித்து பேசியது பின்வருமாறு. “இந்தளவில் நீங்கள் அது போன்ற கேட்ச்களை பிடித்தாக வேண்டும். எங்களுடைய ஃபீல்டிங் மோசமாக இருந்தது. அதனால் நாங்கள் சற்று வீழ்ச்சியை சந்தித்தோம். அதே போல கடைசி 6 ஓவர்களில் நியூசிலாந்து அணி நிறைய ரன்கள் குவித்தது”

“குறிப்பாக 40 ஓவர்களுக்கு முன்பாக நாங்கள் சில கேட்ச்களை தவற விட்டோம். அதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் செட்டிலாவதை தடுக்க நினைத்தும் எங்களால் முடியவில்லை. மேலும் டாஸ் வீசும் போது சொன்னதைப் போலவே பிட்ச்சை 100% உங்களால் கணிக்க முடியாது. இன்று அது மெதுவாக இருந்தது. இப்போட்டியில் நாங்கள் பவுலிங் சிறப்பாக செய்தும் ஃபீல்டிங் கவலையையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் எப்படி முன்னேறலாம் என்பதை விவாதித்து அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் வலுவாக கம்பேக் கொடுப்போம்” என்று கூறினார்.

Advertisement