
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 20-ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி மிக சுவாரசியமாக நடைபெற்ற முடிந்தது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை குவித்தது. பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 222 ரன்கள் மட்டுமே குவித்ததால் இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கையில் துவக்க வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரரான விராட் கோலி 38 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தாலும் அவர் ஆட்டமிழந்த பிறகு பவுண்டரி லைனின் அருகில் தனது ஹெல்மெட்டை கோபமாக எறிந்து விட்டு சென்றார்.
இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி விராட் கோலி அரைசதம் கடந்த பிறகும் ஹெல்மட்டை தூக்கி எறிய என்ன காரணம் யாதெனில் : இந்த போட்டியின் போது ஒரு பக்கம் சால்ட் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்க நிதானமாக விளையாடிய விராட் கோலி 50 ரன்கள் தொட்டார். இந்த 50 ரன்களை அடிக்க அவர் கிட்டத்தட்ட 38 பந்துகளை எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க : ஆர்.சி.பி அணிக்கெதிரான போட்டியில் பாதியிலேயே வெளியேறிய ரோஹித் சர்மா.. என்ன நடந்தது? – விவரம் இதோ
இதன் காரணமாக அடுத்து வரும் ஓவர்களில் அதிரடியாக விளையாட திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த முடியாமல் ஆட்டமிழந்ததை நினைத்து ஒரு விரக்தியில் அவர் கோபமாக ஹெல்மெட்டை தூக்கி எறிந்து விட்டு சென்றார். இருப்பினும் பின்னால் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட பெங்களூரு அணி மிகச் சிறப்பான ரன் குவிப்பையும் இந்த போட்டியில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.