ஆர்.சி.பி அணிக்கெதிரான போட்டியில் பாதியிலேயே வெளியேறிய ரோஹித் சர்மா.. என்ன நடந்தது? – விவரம் இதோ

Rohit Sharma
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 20-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

போட்டியின் பாதியிலேயே வெளியேறிய ரோஹித் சர்மா :

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக ஆர்.சி.பி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக துவக்க வீரர்களாக வழக்கம்போல் ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். வான்கடே மைதானத்தை பொறுத்தவரை மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரோகித் சர்மா இந்த போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 19 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பிறகு அவர் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை. இதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் வீரராக விராட் கோலி நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

நேற்றைய போட்டியின் போது அவருக்கு பேட்டிங் செய்கையில் தொடை பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் காயம் காரணமாக வெளியேறிய அவர் மீண்டும் களத்திற்கு திரும்பாததால் அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement